பக்கம் எண் :

328மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

எனவே, சான்றோர் சிலர் ‘பிசிராந்தையார்’ வரமாட்டார் என்று கூறினர். கோப்பெருஞ்சோழன் கட்டாயம் வருவார் என்றே நம்பினான். ‘நான் செல்வம் துய்க்கும்போது வரவில்லை என்றாலும், நான் அல்லல் படும்போது வராமல் இருக்கமாட்டார்’ என்று அவன் கூறினான்.8

அவன் கூறியபடியே பிசிராந்தையார் வந்து சேர்ந்தார்.9 இதற்கு முன அவன் பிசிராந்தையாரைப் பார்த்ததில்லை அவரது அகவை முதலியவற்றால் சான்றோர்கள் இவ்வாறு இருப்பார் என்று கற்பனை செய்து வைத்திருந்தனர். அவர்களது கற்பனைப்படி பிசிராந்தையார் நரைதிரை உடையவராகத் தோன்றவில்லை. மாறாகக் கறுகறுத்த முடி இருந்தது. இதனைச் சுட்டிக் காட்டிக் காரணம் கேட்டார்கள். அமைதி நிறைந்த இனிய வாழ்க்கையே இதற்குக் காரணம் என்பதைப் புலவர் விளக்கினார்.10

கோப்பெருஞ்சோழன் வடக்கிருப்பதைக் கண்ட சான்றோர் பலர், தாமும் அவனுடன் உயிர்விடத் துணிந்து வடக்கிருந்தனர்.11

இவ்வாறு வடக்கிருக்க அமர்ந்த சான்றோர்களில் ஒருவர் பொத்தியார் என்பவர். அவரை அப்போது வடக்கிருக்க வேண்டா என்று கோப்பெருஞ்சோழன்தடுத்துவிட்டான். பொத்தியாரின் மனைவி முதன் முறையாக நிறைமாதமாய் இருந்தாள். பொத்தியார் சோழனின் நெருங்கிய நண்பர். அதனால், அவன் அவரது குடும்ப நிலையை உணர்ந்திருந்தான். எனவே, அவரை இல்லத்திற்குத் திரும்பிச் சென்று, அவருக்கு மகன் பிறந்தபின் வரலாம் என்று கூறிவிட்டான். பொத்தியார் வேறு வழியின்றி உறையூர் மீண்டார். உறையூரில் இருந்த மன்றம் (அரசவை) கோப்பெருஞ்சோழன் இல்லாமல் வெறுமனே கிடக்கும் காட்சியைக் கண்டு கலங்கி அவர் பாடினார்.12

சில நாள்களில் கோப்பெருஞ்சோழன் இறந்தான். அவன் இறந்ததும், அவனை அவ்விடத்தில் புதைத்து அடையாளக்கல் நட்டு விட்டனர். பொத்தியாருக்கு மகன் பிறந்துவிட்டான். மகனைக் கண்டு


8. ௸ 215 : 10 - 12 9. ௸ 217 : 7 - 8

10. ௸ 191

11. ௸ 219 : 2 - 4

12 ௸ 220 : 5 - 7