பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 329 |
மகிழ்ந்துவிட்டு, நண்பனைக் கண்டு நண்பனோடு அமர்ந்து உயிர்துறக்க எண்ணி ஓடோடி வந்தார் பொத்தியார். கோப்பெருஞ்சோழன் இல்லை. அவனது நடுகல்தான் இருந்தது. கல்லைக் கண்டபோது, கல்லாகி நிற் கோப்பெருஞ்சோழனின் நற்பணிகள் அவர் நினைவிற்கு வந்தன; எண்ணி உருகிப் பாடினார்.13 தனக்கு இடம் தரும்படி அந்தக் கல்லைக் கேட்டார்.14 நடுகல் தனக்கு இடங்கொடுத்துவிட்டதாகக் கருதினார். கல்லாகிய பின்னும் சோழன் தனக்கு இடம் கொடுத்தான் என்று அவர் கருதினார்; வடக்கிருந்தார்;15 உயிர் துறந்தார். தோற்றப் பொலிவு இவன் பெண்களைப்போல் மென்மையான மேனி நலம் (சாயல்) கொண்டவன். எனினும், வலிமையில் ஆண்களுக்கெல்லாம் தலைவன் என்னும்படி மிக்க வலிமை படைத்தவன்.16 கொடைத்தன்மை ‘பாணர் பசிப்பகை’ என்று இவன் கூறப்படுகிறான்.17 இதனால் பாணர்களுக்கு இவன் கொடை வழங்கியமை பெறப்படும். அன்றியுப் பாடுநர், ஆடுநர், புலவர் முதலானோர்க்கும் இவன் கொடை வழங்கியுள்ளான். நண்பனிடமிருந்து வருவதாக அறிந்தால் பறவைகள் ஆயினும் மக்கள்போல் மதித்து அணிகலன்கள் வழங்குவான் என்று பிசிராந்தையார் இவனைப்பற்றிக் குறிப்பிடுகிறார்.18 இதில் கொடை மாண்பைக் காட்டிலும் நட்பின் மாண்பு சிறந்து நின்றமையையே காண்கின்றோம். இவ்வாறே இவன் கல்லாகிய பின்னும் இடங் கொடுத்தாகப் பொத்தியார் கூறுவதும் அமைகிறது. இவன் பாடல்கள் இவ்வரசனே ஒரு புலவனாகவும் விளங்கினான். இவன் பாடல்களில் இவனது நட்பின் பண்பு வெளிப்படுகிறது. முயற்சிக்குத் தக்க பயன் உறுதியாகக் கிடைக்கும் என்று இவன் கூறுவது இவன் உழைப்பில் நம்பிக்கை உடையவன் என்பதைக் காட்டுகிறது. பிறர் கூற்றாக அமைந்
13. புறம். 221 14. ௸ 222 : 5 - 6 15. ௸ 223 : 3 - 4 16. ௸ 221 : 5 17. ௸ 212 : 6 - 7 18. ௸ 67 : 13 - 14 |