330 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
தாலும் ‘பேதைச் சோழன’ என்று இவன் தன்னையே குறிப்பிட்டுக் கொள்வது இவனது அடக்க உணர்வை வெளிப் படுத்துகிறது. பெயர்களும் அடைமொழிகளும் ‘கோப்பெருஞ் சோழன்’,19 ‘பெருஞ்சோழன்,’20 ‘பெருங்கோக்கிள்ளி’,21 ‘பொலந்தார்த் தேர்வண் கிள்ளி’,22 ‘அடுமான் தோன்றல்’23 ஆகிய பெயர்களும், பெயர் அடைமொழிகளும், இவனுக்கு வழங்கப்பட்ட பல்வேறு பெயர்களையும் போர்க்கோலத் தோற்றத்தை புலப்படுத்துகின்றன. (இ) சென்னி மரபினர் இளஞ்சேட்சென்னி - 1 (நெய்தலங்கானல்) (பாமுள்ளூர் எறிந்தவன்) ‘சென்னி’ எனும் சோழர் குடியைச் சேர்ந்த இரு அரசர்கள். கரிகால் பெருவளத்தானுக்கு முன்னர் ஆட்சி செய்துள்ளனர். அவர்கள் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி (இளஞ்சேட் சென்னி-1), செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி எனும் உருவப்பஃறேர் (இளஞ்சேட் சென்னி-2). இவர்களுக்கு இடையே இருந்த உறவுமுறை யாதென்பது தெரியவில்லை. பாட்டனும் பேரனுமாக இவர்கள் இருப்பார்களானால், இவர்களுக்கு இடையே வேறோர் அரசன் ஆட்சி செய்திருக்கவேண்டும். அவன் யார் என்பதை அறிய இயலவில்லை. இவர்கள் இருவரும் சமகாலத்தில் அரசாண்டவர் எனக் கொள்ளுவோரும் உண்டு. கிள்ளி மரபினருக்கும் சென்னி மரபினருக்கும் இடைப்பட்ட நிலையில் கோப்பெருஞ்சோழன் விளங்குகிறான். அவனுடைய இயற்பெயர் தெரியாததனால், சிறப்புப் பெயராலேயே அவனைச் சுட்டியுள்ளோம்.
19. புறம். கொளு, 212 : 8 20. பதிற். பதி. 9 : 6 21. புறம். 67 : 11 22. ௸ 220 : 5 - 6 23. ௸ 213 : 8 |