பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 331 |
செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி உறையூரிலிருந்து அரசாண்டு கொண்டிருந்த காலத்தில், இவன் புகார்நகரப் பகுதியில் இருந்து கொண்டு சோழநாட்டின் ஒரு பகுதியை அரசாண்டான். நெய்தலங்கானல் இளங்சேட் சென்னியின் பெயர் ‘சேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி’ என்று புற நானூற்றுக் கொளுவில் காணப்படுகிறது. இதில் சேரமான் என்னும் அடை மொழி வேறு எந்தப் பெயர்த் தொடரிலும் காணப்படாத முறையில், கூறப்படும் அரசனுக்கு அடைமொழியாய் அமையாமல் அடைமொழி யாகிய ‘பாமுள்ளூர்’ என்பதற்கு அடைமொழியாய் அமைந்துள்ளது. இதனால் இந்தப் பெயர்த் தொடரில் ஏதோ தவறு இருக்கிறது என்று எண்ணவேண்டியுள்ளது. அல்லது இவனது வரலாற்றில் மேலும் குழப்பம் இருக்கிறது என்று எண்ண வேண்டியுள்ளது. போர் பாமுள்ளூர் என்ற ஊரை இவன் தாக்கி அழித்தான் என்பது இவனது பெயருக்கு அடைமொழியாகப் புறநானூற்றைத் தொகுத்த ஆசிரியர் ‘பாமுள்ளூர் எறிந்த’ என்பதைக் கொடுத்ததிலிருந்து தெரிகிறது. கொடை இவன் பாணர்களுக்குப் பகைவர் கோட்டைகளைப் பரிசிலாகக் கொடுத்தான். கோட்டை பகைவர்களின் கைவசம் இருக்கும்போதே தான் கைப்பற்றப்போகும் உறுதிநோக்கிப் பரிசிலாகக் கொடுத்தான்.1 இளஞ்சேட் சென்னி - 2 (செருப்பாழி எறிந்தவன்) ‘ஊன்பொதி பசுங்குடையார்’ என்னும் சிறப்புப் பெயரால் அறியப்படும் புலவர் இவனைப்பற்றிப் புறநானூற்றில் பாடியுள்hர்.2 இடையன் சேந்தங்கொற்றனார் என்னும் புலவர் அகநானூற்றில் ‘சோழர் பெருமகன் இளம்பெருஞ்சென்னி’3 என்று சுட்டியுள்ளார்.
1. புறம். 203 : 9 - 11 2. ௸ 370, 378 3. அகம். 375 : 10 - 15 |