334 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
தோற்றம் வெண்கொற்றக் குடையின்கீழ் இவன் காட்சியளித்தான்.14 கடலிடையே தோன்றும் செங்கதிர்போலப் படைகளுக்கிடையே தானும் படைக்கலம் தாங்கிப் பொன்தேரின்மேல் பொலிவுடன் தோன்றினான்.15 இந்தக் காட்சி இவனது பெயரில் அமைந்துள்ள ‘உருவப் பல்தேர்’ என்னும் அடைமொழியை விளக்கும் சான்றாய் விளங்குகிறது. மகன் ‘உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி’ என்று புறநானூற்றுத் தொகுப்பாசிரியர் குறிப்பிடும் பெயர், அவன் மகன் காலத்துப் புலவரான முடத்தாமக்கண்ணியாரால் ‘உருவப்பஃறேர் இளையோன்’ என்று கூறப்படுகிறது.16 பொருநராற்றுப் படையில் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ள கரிகாற் பெருவளத்தான் இவன் மகன். இளஞ்சேட் சென்னி ஒப்புநோக்க முடிவு இதுவரை புறநானூற்றுத் தொகுப்பாசிரியர் பெயர் சுட்டியுள்ளபடி மூன்று இளஞ்சேட்சென்னியரின் வரலாறுகளைத் தனித்தனியே பார்த்தோம். இனி அவர்கள் மூவர்தாமா? இருவரா? ஒருவரா? என்று எண்ணிப்பார்க்க வேண்டும். செருப்பாழி எறிந்தவனையும், பாமுள்ளூர் எறிந்தவனையும் ஒருவனே என்று கொள்ள முடியவில்லை. அவர்களிடையே மூன்று வேற்றுமைகள் தெளிவாகத் தெரிகின்றன: (1) ஒருவன் செருப்பாழியை வென்றான். மற்றொருவன் பாமுள்ளூரை வென்றான். (2) செருப்பாழியை வென்றவன் உறையூரிலிருந்து கொண்டு அரசாண்டான். பாமுள்ளூரை வென்றவன் நெய்தலங்கானலில் இருந்து கொண்டு (புகாரிலிருந்து கொண்டு) அரசாண்டான்.
14. ௸ 266 : 7 15. ௸ 4 : 14 - 19 16. பொருநர். 130 |