350 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
அவலக் காட்சியைக் கண்டு வருந்திப் பாடியுள்ளார். இடையன் தன் ஆடுகளுக்காகப் பூத்துக் காய்த்து விளங்கிய வேங்கை மரத்தின் கிளைகளை மொட்டை மொட்டையாக வெட்டிச் சாய்த்தபின் மொட்டைக் கிளைகளுடன் நிற்கும் அடி மரம்போல் அவர்கள் அணிகலன்களைக் களைந்துவிட்டு பொலிவிழந்து நின்றார்களாம். மனைவியர்52 இவன் இறந்தபோது இழை களைந்தவர் ‘மெல்லியல் மகளிர்’ என்று குறிப்பிடப்படுகின்றனர். கணவன் இறந்தால் அதற்காகத் தம் அணிகலன்களைக் களைந்துவிடுதல் தமிழர் பண்பாடு. இந்த வகையில் இழை களைந்தவர் எல்லாரும் கரிகாலனது மனைவியர் என்பது பெறப்படும். இழை களைந்தவர் ‘மகளிர்’ என்று பன்மையால் குறிப்பிடப்படுவதால் கரிகாலனுக்குப் பல மனைவியர் இருந்தனர் என்பது புலனாகின்றது. மகள் ஆதிமந்தி என்பவள் இந்தக் கரிகாலனின் மகள் என்று கூறப்படுகிறாள். சேர இளவரசன் ஆட்டன் அத்தியை மணந்து இவள் வாழ்ந்தாள். இவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைச் சேரர் வரலாற்றில் கண்டோம். நலங்கிள்ளி (சேட்சென்னி) சேட்சென்னி நலங்கிள்ளி சோழநாட்டில் தங்கி அரசாண்டவன் அவனது தலைநகர் உறந்தை.1 தந்தை முதலானோர் இவனது பெயர் ‘சேட்சென்னி நலங்கிள்ளி’ என்று பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.2 இஃது இவன் சேட்சென்னியின் மகன் என்பதைக் காட்டுகிறது. மாவளத்தான் என்னும் பெயர்கொண்ட ஒருவன் நலங்கிள்ளியின் தம்பி என்று குறிப்பிடப்படுகிறான். இவர்கள் இருவருடைய தந்தை யின் பெயர் ‘நலங்கிள்ளி சேட்சென்னி’ என்று குறிப்பிடப்படுகிறது.
52. ௸ 224 : 17 1. புறம். 68 : 18 2. ௸ 225 : 9 |