பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்349

சிறப்புப் பெயர்கள்

‘திருமாவளவன்’,46 ‘பெருவளத்தான்’,47 என்னும் பெயர்கள் இவனது செல்வ வளத்தைக் காட்டுவனவாய் உள்ளன. ‘இயல்தேர் வளவன்’48 என்னும் அடைமொழி இவன் தேரில் சென்ற காட்சியை நினைவூட்டுகிறது. ‘முருகற் சீற்றத்து உருகெழு குருசில்’49 என்பது இவனது சினமிகுதியைக் காட்டுகிறது.

தோற்றம்50

இவனது கால்கள் களிறுகளை நடத்திப் பழக்கப்பட்டவை; அவற்றில் அவன் வீரக் கழல்களை அணிந்திருந்தான். கைகள் அம்புகள் எய்து வளம்பெற்றவை; அவை வில்லையும் அம்பையும் கொண்டிருந்தன. வேண்டாதபோது வில் அவனது மார்பிலே கிடந்தது. மலர்ந்த அவனுடைய மார்பைவிட்டு நீங்கத் திருமகள் மறுத்துவிட்டாள். அந்த மார்பில் தோல் என்னும் பெயர் கொண்ட எறுழ் வன்மையுடையதாகப் பொத்திக் கட்டப்பட்டிருந்தது. இது இவன் போர்க்கோலம் பூண்டிருந்தபோது தோன்றிய உருவம்.

போர்க்கோலம் பூணாத போதும் இவன் அரிமாவைப் (சிங்கத்தைப்) போலக் காட்சியளித்தான். அவனது மார்பிலே ஒளிமிக்க அணிகலன்கள் விளங்கின; சிவந்த சந்தனம் பூசப்பட்டிருந்தது. மகளிர் தழுவவும் மைந்தர் ஏறி விளையாடவும் ஏதுவாய்ப் பரந்து விளங்கியது அது. போர்க்கோலம் பூண்டிருந்தபோது, அவன் மார்பிலே விளங்கிய வலிமைமிக்க தோல் என்னும் கவசம் இல்லை. மாறாக, வேறொரு கவசம் கலைநோக்குடன் செய்யப்பட்டு விளங்கியது. பகையரசர்கள் தலையில் சூடிய முடிமணிகள் அந்த மார்புக் கவசத்தில் பதிக்கப் பட்டிருந்தன.

கையறவு51

கரிகாலன் உயிரோடு வாழ்ந்தபோது அவனது வெற்றிச் சிறப்புகளை வியந்து பாடிய கருங்குழலாதனார் அவன் இறந்த பின் அவனது மனைவியர் தம் இழைகளைக் களைந்துவிட்டு நின்ற


46. பட்டினப். 299; பொருநர். வெண்பா

47. ௸ கொளு, பொருநர். கொளு

48 புறம். 7 : 10

49. பொருநர். 131

50. புறம். 7 : 1-6; பட்டினப். 293 - 299

51 ௸ 224 : 14 - 17