பக்கம் எண் :

36மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

மா, களிறு, தேர் ஆகியவற்றைப் பரிசிலாகக் கொடுத்தான்.62 பகைவர்களிடம் பெற்ற உயர்ந்த அணிகலன்களைப் பரிசிலாகக் கொடுத்hன்.63 உணவு, உடை முதலானவற்றால் மகிழ்ந்திருக்கும் தன் மகிழ்ச்சியான வாழ்வையே பிறருக்கு அளித்தான்.64 மிளை, அகழி, மதில், நிலைவாயில், ஆரெயில் முதலானவற்றால் இவனது அரண்மனை, பகைவரால் உள்ளே நுழைய முடியாத அளவு அமைந்திருந்தது; ஆனால், பரிசிலர்கள் எளிதாக நுழைவதாய் அமைந்திருந்தது. பரிசிலர்கள் உள்ளே நுழைந்து, உண்டு, உடுத்து, நுகர்ந்து, மகிழ்ந்து இருந்தனர். இவ்வாறு பரிசிலர்கள் இருந்ததைப் பார்த்துப் பெருமிதத் தோடு மலரும் மார்பினனாய் அவன் விளங்கினான்.65 இத்தகைய வள்ளன்மையால் இவனைப் பரிசிலர்களின் செல்வம் என்றே அழைத்தனர்.66

இவன் தன்மீது பத்துப் பாடல்கள் பாடிச் சிறப்பித்த குமட்டூர்க் கண்ணனார் என்னும் அந்தணப் புலவருக்கு தான் வெற்றி பெற்ற உம்பற்காட்டுப் பகுதியில் ஐந்நூறு ஊர்களைப் பிரமதேயமாகக் கொடுத்தான். மேலும், அவரது வாழ்க்கைச் செலவுக்காகத் தனது எஞ்சிய ஆட்சிக் காலம் முழுவதும் தான் வென்ற தென்னாட்டிலிருந்து வரும் வருவாயில் சரிபாதியும் கொடுத்தான்.

பண்புநலம்

பகைவர்கள் பெரிய தவற்றைச் செய்திருந்தாலும் அவர்கள் பணிந்து திறை தந்தால், திறையை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு அருள்புரியும் பண்பு நலம் உடையவன்;67 நிலத்தைப் போல் பொறுமை யுடையவன்; நீரைப்போல் சினம் ஆறும் தன்மை உடையவன்; காற்றைப்போல் எல்லோர் உள்ளங்களிலும் நிறைந்திருப்பவன்; வெட்டவெளியைப்போல் பரந்த உள்ளம் உடையவன். இந்தப் பண்புகளில் இவன் அந்த நான்கு பூதங்களைப்போல் அளக்க முடியாத தன்மையை உடையவன்.68 நாள், கோள், திங்கள், ஞாயிறு, அழல்


62. பதிற். 20 : 16

63. ௸ பதி. 2 : 9 - 10

64. ௸12:25 மகிழ்-மகிழ்சிசியான வாழ்வு

65. ௸ 20 : 21 ‘அட்டுமலர் மார்பன்’

66. ௸ 15 : 21 ‘பரிசிலர் வெறுக்கை’

67. ௸ 17 : 2-3

68. ௸ 14 : 1-2