பக்கம் எண் :

376மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

தொண்டித் துறைமுகப் பட்டினத்தில் வாழ்ந்திருந்த பொய்கையார் கோக்கோதை மார்பன். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் ஆகியோர் காலத்தில் இருந்தவர். இந்தப் பொய்கையார் அவ்வரசர் காலத்துக்குப் பிறகு கணைக்கால் இரும்பொறை. சோழன் செங்கணான் ஆகியோர் காலத்திலும் வாழ்ந்திருந்தார். அவர் கணைக்கால் இரும்பொறை குடவாயிற் கோட்டத்தில் செங்கணானால் சிறை வைக்கப்பட்டதை அறிந்து செங்கணானிடம் சென்று ‘களவழி நாற்பது’ என்னும் நூலைப் பாடி அதற்குப் பரிசாகக் கணைக்கால் இரும்பொறையைச் சிறையிலிருந்து விடுவிக்குமாறு கேட்டார் என்றும், செங்கணான் கணைக்கால் இரும்பொறையை விடுவித்தான் என்றும், விடுவிப்பதற்கு முனபே சிறைக்கோட்டத்தில் கணைக்கால் இரும் பொறை துஞ்சினான் என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறு புறநானூற்றுச் செங்கணானுக்கும் களவழியில் கூறப் பட்டுளள சோழ அரசனுக்கும் தொடர்பு இருப்பதாகக் கொள்வது பொருந்துமாறில்லை. காரணங்களை எண்ணிப் பார்க்கலாம். இதனுடன் சைவ அடியார்களில் ஒருவனாய் விளங்கிய செங்கணானைப் பற்றியும் எண்ணலாம்.

போரில் வெற்றிபெற்ற அரசனது பெயர் சோழன் செங்கணான் என்று புறநானூற்றுக் கொளுக் குறிப்பிடுகிறது. செங்கண்மால்,3 செங்கட்சினமால்,4 திண்டேர்ச் செம்பியன்,5 பொன்னார மார்பிற் புனை கழற்காற் செம்பியன்6 என்ற முறையில் ஓரளவு சிறப்பு வகையாலும் புனல்நாடன்7 புனல் நீர் நாடான்,8 நீர் நாடான்,9 காவிரி நாடன்,10 சேய், 11 பைம்


3. களவழி, 4 : 3, 5 : 3, 11 : 5

4. ௸ 15 : 3 - 4, 21 : 4 - 5

29 : 3 - 4, 30 : 3, 40 : 3

5. ௸ 6 : 5, 23 : 4, 33 : 4

6. ௸ 38 : 3

7. 1 : 4, 2 : 4, 9 : 3, 10 : 3,14 : 3

16 : 4, 20 : 3, 25 : 3, 26 : 4, 27 : 3

28 : 5, 31 : 3, 36 : 4, 37 : 3, 39 : 3

8. ௸ 8 - 4, 17 : 4, 22 : 5, 41 : 4

9. களவழி, 3 : 3, 19 : 3, 24 : 4, 32 : 3

10. ௸ 7 : 3, 12 : 4, 35 : 3, 36:2

11. ௸ 13 : 4, 18 : 3