380 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
பாண்டிய நாடுகளைக் களப்பிரர் கைப்பற்றிக் கொண்டதுபோலவே, சோழ நாட்டையும் கைப்பற்றிக் கொண்டார்கள். சோழன் செங்கணானோடு, சங்க காலத்துச் சோழர் ஆட்சி முடிவுற்றது எனலாம். பிற சோழ அரசர்கள் - 1 அரசுகட்டில் ஏறி நாடாளும் உரிமை பெறாத சில சோழ அரசர் குடியினரைப்பற்றிய குறிப்புகள் சங்கப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. அக் குறிப்புகளிலிருந்து, அந்த அரசக் குடியினர் செங்கோல் வேந்தரின் தம்பியராகவோ, சிற்றப்பன் பெரியப்பன் பிள்ளைகளாகவோ இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது. அவர்களுள் சிலர், சிறப்புமிகு பாவலராகவும் விளங்கினர். ‘எலி போன்றவர் நட்பு வேண்டா, புலிபோன்றவர் நட்பே போற்றிப் பேணத்தக்கது’ எனும் அரிய கருத்தை அறிவுறுத்தும் சோழன் நல்லுருத்திரன்,1 சோழன் நலங்கிள்ளியைப் போன்ற உணர்ச்சித் துடிப்பும் கற்பனை வளமும் வாய்ந்த புலவனாவான். கிள்ளிமரபினைச் சேர்ந்தோர் நெடுமுடிக்கிள்ளி மணிமேகலை என்னும் காப்பியத்தால் அறியப்படும் சோழ அரசன் நெடுமுடிக்கிள்ளி. ‘இவனும் நெடுங்கிள்ளியும் ஒருவரா? வெவ்வேறானவரா?’ என்னும் ஐயம் அறிஞர்களிடையே உண்டு. ஒருகால் இவன் ஒரு கற்பனைப் படைப்பாகவும் இருக்கக்கூடும். கிள்ளி என்பவன் புகார் நகரத்தில் இருந்து கொண்டு அரசாண்டான் என்பது மணிமேகலை வரலாற்றால் அறியப்படுகிறது. இவன் மகன் உதய குமரன். இவன் மணிமேகலையைக் காதலித்தான். அவளை அடைய முயன்ற போதெல்லாம் அடைய முடியாமல் ஏமாந்தான். இறுதியில் ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அவளைப் பலவந்தமாக அடையக் கருதி அவளது இருப்பிடம் சென்றபோது வேறொருவனால் கொல்லப்பட்டு மாண்டான். மகன் இவ்வாறு ஒருத்தியைக் கற்பழிக்க முயன்ற குற்றத்தைச் செய்து அந்தக் குற்றத்திற்காக வேறொருவனால் கொல்லப்பட்டு
1. ‘விளைபதச் சீறிடம் நோக்கி வளைகதிர் வல்சி கொண்டு அளை மல்க வைக்கும் எலிமுயன் றனைய ராகி உள்ளதம் வளன்வலி யுறுக்கும் உளம்இ லாளர்’ (புறம். 190 : 1 - 4) |