398 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
மேற்கு எல்லைப் பகுதி சங்க காலத்துப் பாண்டிய நாடு மேற்குக் கரைப்பக்கத்தில் இப்போதைய தென்திருவாங்கூர் வரையில் பரவி இருந்தது. பொதிகை மலை நாடும், நாஞ்சில் நாடும் தென்திருவாங்கூர் வரையில் பாண்டிய நாட்டுடன் சேர்ந்திருந்தன. ஆய் என்னும் வேள் அரசர் பொதிகை மலை நாட்டை அரசாண்டார். பாண்டிய அரசர்களைச் சேர்ந்திருந்த ஆய்ச் சிற்றரசர்களின் நாடு, மேற்குக் கடற்கரை வரையில் விரிந்து இருந்தது. வடக்கு எல்லைப் பகுதி முதுகோடி (தனுஷ்கோடி) பாண்டிய நாட்டைச் சேர்ந்திருந்தது.9 தென்வெள்ளாறும் அதன் பகுதியாகிய கொடும்பாளூரும் பாண்டிய நாட்டின் வடஎல்லைகளாகும். கொடும் பாளூரையாண்ட குறுநில மன்னர்கள் இருங்கோவேள் என்பவராவர்.10 திண்டுக்கல் பாறையும், கோடைக்கானல் மலைகளும் பாண்டிய நாட்டின் வடக்கே இருந்தன. கோடைக்கானலில் தென்னவன் மறவனான கோடைப் பொருநன் பாண்டியருடைய சேனாதிபதியாக இருந்தனன்.11 பன்றிமலைகள் எனப்படும் வராக மலைகளும் பாண்டிய நாட்டின் வடபகுதியில் இருந்தன. அரபிக் கடலை அடுத்திருந்த வேணாடு சங்ககாலத்தில் பாண்டிய நாட்டைச் சேர்ந்திருந்தது. பாண்டிய நாட்டு மலைகள் இருங்குன்றம் இக் குன்றம் அக்காலத்தில் கீழ்இரணியமுட்ட நாட்டைச் சேர்ந் திருந்தது. ஓங்கிருங்குன்றம். கேழிருங்குன்றம், மாலிருங்குன்றம், திருமால்குன்று. திருமால் இருஞ்சோலை, சோலைமலை முதலான சிறப்புப் பெயர்கள் இதற்கு வழங்கின. இம் மலையில் கண்ணன். பலராமன் ஆகிய இருபெருந் தெய்வங்களுக்கும் கோயில்கள் இருந்தன.12 புண்ணிய சரவணம், பவகாரணி, இட்டசித்தி என்னும் மூன்று
9. ‘வென்வேற் கவுரியர் தொன்முது கோடி’ (அகம். 70 : 13) 10. கொடும்பாளூர் இக்காலத்திய புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. 11. அகம். 13 : 10 12. பரிபா. 1 : 1 - 5, 2 : 19 - 21, 13 : 27 - 33, 15 : 13 - 14 |