பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்397

காலத்தில் கன்னியாகுமரிக்கு அருகிலே இருந்து மறைந்து போன நிலப்பரப்பு வேறு. இவை இரண்டையும் ஒன்றாகக் கூறுவது கூடாது.8


8. லெமூரியாபற்றிய தீர்ந்த முடிவு இதுகாறும் கிடைக்கவில்லை. எனினும், லெமூரியாக் கண்டம் இருந்தது உண்மையே என்றும் 1,50,000 ஆண்டு களுக்கு முற்பட்ட தமிழர்களின் மூதாதையர்கள் அங்கு வாழ்ந்திருக்கக் கூடு மென்றும் இந் நூலின் முதல் தொகுதியில் ‘தொல்பழங்காலம்’ பக்கம் 25-ல் விளக்கப்பட்டுள்ளது. அங்கு வாழ்ந்தவர்கள் தமிழர்களின் மூதாதையர்கள் என்று தீர்மானமாகக் கூறமுடியாவிட்டாலும் தென்னிந்தியாவை ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியாவுடன் இணைத்த ஒரு பெருநிலப்பகுதி இருந் திருக்கலாம். அண்மையில் ஜப்பான் மொழிக்கும் தமிழுக்கும் தொடர்பு இருந் திருப்பதாகச் சில அறிஞர் கூறுகின்றனர். கபாடபுரத்தை வடநாட்டுக் காப்பியங்கள் குறிப் பிடுவதிலிருந்து ஒரு நிலப்பகுதி குமரிக்குத் தெற்கில் இருந்திருக்கலாம் எனக் கருத இடமுண்டு.