| பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 421 |
மேற்கூறப்பெற்ற போரில் இவனது காவல்மரமான வேம்பு வெட்டி வீழ்த்தப்பட்டது. அம் மரத்தின் அடித்துண்டை வெற்றி பெற்ற செங்குட்டுவன் முரசு செய்து கொள்ளவதற்காகத் தன் தலைநகருக்கு இழுத்துச் சென்றான். போரில் இறந்த வீரர்களின் மனைவியர் கைம்மை நோன்பிற்காகக் களைந்த தலைமயிரைக் கொண்டு கயிறு திரித்து அந்தக் கயிற்றில் வெட்டிய வேப்பமரத்துண்டைக் கட்டி யானைகளில் பிணைத்து தன் தலைநகர்க்கு இழுத்துச் சென்றான். இந்தப் போரில் பழையன் மாறன் மாண்டிருக்கலாம்.20 சிறப்புகள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கு இவன் பலபோர்களில் வெற்றி தேடித் தந்திருக்கிறான். இதனைப் பாராட்டி நெடுஞ்செழியன் இவனுக்கு வேலைப்பாடு அமைந்த மாலை ஒன்றைச் சூட்டிச் சிறப்பித்தான்; மாறன் என்னும் பட்டத்தையும் அளித்தான்.21 பழையன் என்று பொதுப்பட வழங்கப்பட்டுவந்த இவன், இந் நிகழ்ச்சிக்குப் பிறகு ‘பழையன் மாறன்’ என்று வழங்கப்பட லானான் என்பதைப் ‘பெரும்பெயர் மாறன்’ என்னும் தொடர் உணர்த்துகிறது. தோற்றம் - குடி ‘நெடுந்தேர் இழையணி யானைப் பெரும்பெயர் மாறன்’ என இவன் சிறப்பிக்கப்படுதலால், தேரிலும் யானையிலும் இவன் உலாப்போந்த காட்சி நமக்குக் காட்டப்படுகிறது. பழையன் இவனது பெயர். இவன் பழையர் குடியைச் சேர்ந்தவனாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. இளம் பழையன் மாறன் இவன் ‘வித்தை’ என்னும் இடத்தையாண்ட அரசன். இவன் இளஞ்சேரல் இரும்பொறையோடு போரிட்டுத் தோல்வியுற்றான்.22 பெயர் அமைதிகொண்டு பழையன் மாறனின் தம்பியாக இவன்
20. பழையன் மாறன் என்னும் பெயர்கொண்ட ஒருவன் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் படைத்தலைவனாக விளங்கினான். இவனுடைய பெயரிலிருந்து மோகூர் அரசன் பழையனின் மகனாக இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. 21. அகம். 346 : 19 22. வித்தை போர்ப்பயிற்சி என்று கொள்வாரும் உளர் |