| பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 425 |
மூவேந்தர் நட்பு தமிழக வரலாற்றில் மிகச் சிறப்பு வாய்ந்ததாக எண்ணத்தக்க மூவேந்தர் நட்பு இவன் காலத்தில் அமைந்தது. சேரமான் மாரி வெண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆகியோருடன் இவனும் சேர்ந்து முத்தீப் போல அமர்ந்திருந்து செயல்படும் காட்சியைப் புலவர் ஒருவர் கண்டு வாழ்த்தியுள்ளார்.14 பார்ப்பார்க்குப் பூவும் பொன்னும் தாரை வார்த்துத் தரவேண்டும் என்றும், மகளிர் பொற்கலத்தில் ஊட்டும் தேறலை உண்டு மகிழ்ந்து களித்திருக்க வேண்டும் என்றும் கூறி அவர் வாழ்த்தினார். மூவேந்தரின் இத்தகைய கூட்டுறவு பாரியைப் பொறுத்தமட்டில் தீதாய் முடிந்தாலும், தமிழைப் பொறுத்தமட்டில் நன்மையாக முடிந்தது. தமிழ்நாட்டு மூவேந்தர்களிடையே பகைமை நீங்கி அமைதி நிலவியது. பாண்டியன் தமிழில் பாடல்களைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டான். உக்கிரப் பெருவழுதி காலத்தில்தான் குறுந்தொகை, நற்றிணை, நெடுந்தொகை என்னும் நூல்கள் தொகுக்கப்பட்டன. நெடுந்தொகை அல்லது அகநானூறு என்னும் நூலைத் தொகுக்கும் பணியைத் தானே மேற்கொண்டான்; உப்பூரிகுடிகிழார் மகன் உருத்திரசன்மன் என்னும் புலவரைத் தலைமைப் புலவராக அமர்த்தி அத் தொகுப்புப் பணியைச் செய்து முடித்தான். திருக்குறள் அரங்கேற்றமும், இறையனார் களவியலுக்கு நக்கீரர் என்பார் எழுதிய உரையும் இவனது அவையில் அரங்ககேற்றப்பெற்றன என்பது செவிவழிச் செய்திகளாகும். நாஞ்சில் வள்ளுவன் இவன் காலத்தில் வாழ்ந்தவன்.15 வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி16 சோழ அரசன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் இந்தப் பாண்டிய அரசனும் ஒருங்கிருக்கக் கண்ட புலவர் ஒருவர் இவர்களுடைய நட்பு நீடிக்கவேண்டுமென்று வாழ்த்துகிறார். இவர்கள் கூடியிருந்த இடம் சோழ நாட்டுத் தலைநகர் என்பது. புலவர் சோழனை முன்னிலைப்படுத்தியும் பாண்டியனைப் படர்க்கையில் குறிப்பிட்டும் பாடியிருப்பதிலிருந்து தெரிகிறது. இவ்வரசனைப் பாடிய புலவர். பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனையும்17
14. ௸ 367 : 13 15. புறம். 367 16. ௸ 58 17. ௸ 57 |