| 426 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
பிட்டங்கொற்றனையும் தனித்தனியே நேரில் கண்டு பாடியுள்ளார்.18 பிட்டங்கொற்றன், சேர அரசன் கோதையின் படைத்தலைவன் என்பதும்19 கோதை அல்லது கோதை மார்பன். கிள்ளி வளவனிடம் பழையன் மாறன் மதுரையில் தோற்றபோது மகிழ்ந்தான் என்பதும்20 பல பாடல்களைத் திரட்டி அறியப்படும் சமகால நிகழ்ச்சிகள். இந் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து எண்ணும்போது பழையன் மாறன், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனுக்காக மதுரையில் போரிட்டான். அச்சமயத்தில் பாண்டியநாட்டு அரியணையைப் பெறப் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனின் உதவியை வேண்டி னான். அப்போதுதான் சோழன் அவையில் இருவரையும் ஒருங்கு கண்டு புலவர் வாழ்த்தினார். பெருந்திருமா வளவன் குராப்பள்ளியில் துஞ்சியவன் என்பது அவனது பெயரால் தெளிவாகிறது.21 அந்த அடை மொழியைக் கொண்ட கிள்ளிவளவன் என்பது இவனே ஆவான்.22 திருமாவளவன் என்பது இச் சோழனின் இயற்பெயர். கிள்ளிவளவன் என்பது கிள்ளியின் மகன் வளவன் என்று விளங்கும் பெயர். கிள்ளிவளவன் தன்னை நாடிவந்து உதவி வேண்டிய வெள்ளி யம்பலத்துத் துஞ்சிய பெருவழுதிக்கு உதவினான். பாண்டியனின் கூடல் நகரத்தைத் தாக்கி வென்று, பெருவழுதிக்கு அளித்தான். இந்தப் பெருவழுதி மதுரையில் இருந்து அரசாண்டு வரும்போது, வெள்ளி யம்பலம் என்று வழங்கப்பெறும் மதுரைச் சொக்கநாதர் கோயில் மன்றத்தில் உயிர்நீத்தான்.23 இந்தப் பெருந்திருமாவளவனும், பெரு வழுதியும் சேர்ந்து வென்ற நாடுகளில் புலிச் சின்னமும் கயற்சின்னமும் சேர்த்துப் பொறிக்கப்படவேண்டும் என்று புலவர் அறிவுரை கூறினார். இவனது ஆட்சிக் காலத்தில் சோழ, பாண்டிய நாட்டு இலச்சினைகள் இவ்வாறு விளங்கின எனக் கொள்ளலாம். (இந்த கூட்டுச் சின்னத்தை மீண்டும் தனிச் சின்னமாக்கியவன் தலையாலங்கானத்துச் செருவென்ற
18. ௸ 169, 171 19. ௸ 172 : 8 - 11 20. அகம். 346 : 25 21. புறம். 373 22. ௸ 50, 68, 197 23. ‘துஞ்சினான்’ என்பதற்கு ஓய்வு எடுத்துக்கொண்டான் என்னும் பொருளும் உண்டு எனக் கூறப்பெறுகிறது. |