பக்கம் எண் :

430மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

போது. ஏதோ ஒருவகையில் தமிழ்நாடு முழுவதும் இவனுக்குரிய தாயிற்று என்ற நிலை வந்ததுபோலும். அதன்பின்னும் இவனது போர்வேட்கை தணியவில்லை. ‘வடபுல மன்னர் வாட அடல்குறித்து’ எழுந்தான்,35 இதன் பிளைவு என்னவாயிற்று என்பது தெரியவில்லை. தமிழ்நாட்டிற்கு வடக்கில் இருந்த சில சிறறரசர்களையேனும் இவன் வென்றிருக்கலாம். சினப்போர் வழுதி‘, ‘இயல்தேர் வழுதி’ என்னும் அடைமொழிகள் இவனது சினமிகுதியையும், தேரில் உலா வந்த பாங்கையும் நம் நினைவிற்குக் கொண்டுவருகின்றன. பாண்டியன் உக்கிரப் பெருவழுதியும், இந்த மாறன் வழுதியும் ஒரே காலத்தில் அகத்திணைத் தமிழ்ப் பாடல்களைத் தொகுத்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களைப் பாடிய புலவர்களைக் கொண்டு இவர்கள் சமகாலத்தவர் என்பதை உணரலாம்.36

கடலன் வழுதி

மதுரை மாவட்டம் மீனாட்சிபுரத்தையடுத்த கழுகுமலையில் உள்ள சமணர் படுக்கைகளுக்குமேல் உள்ள பாறைகளில் சங்க காலத்துத் தாமிழி எழுத்துகள் உள்ளன. அந்த எழுத்துகள் கி. மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அந்த எழுத்துகளில் கடலன் வழுதி என்ற பெயர் வருகிறது. இந்த வழுதி நெடுஞ்செழியனின் பணி மேற்கொண்டவன்.37 இவன் கவிஞனாகிய நந்தி என்னும் சமணத் துறவிக்கு கழுகுமலைப் பாறையில் படுக்கை வெட்டிக் கொடுத்தான்

மருங்கை வழுதி

மருங்கூரைத் தலைநகராகக் கொண்டு வழுதி என்ற ஒருவன் ஆண்டுவந்தான். இவன் பசும்பூண் வழுதி என்று குறிப்பிடப்படுகிறான்.

கொற்கை வழுதி

கொற்கைத் துறைமுகத்தைக் தலைநகராகக் கொண்டு வெற்றி வேற்செழியன் ஆண்டுவந்ததுபோல இவன் ‘நற்றேர் வழுதி’ என்று சிறப்பித்துக் கூறப்படுகிறான்.38


35. புறம். 52 : 5

36. மருதன் இளநாகனார், ஒளவையார்

37. அடிப்படைச் சான்றுகள் - II கல்வெட்டு எண் 1

38. அகம். 130 : 11