பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்81

செய்திகளில் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும். துணையாக நின்று இவன் போரிட்டமையால் வெற்றிகள் இவனுக்குரியன என்று வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை. இவன் உன்னமரத்தின் பகைவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளான்.15 இந்த உன்னமரம் அகப்பா மன்னனின் காவல் மரமாகவோ வேறொருவனுடையதாகவோ இருக்கலாம். யாருடையதாக இருப்பினும் இவன் அந்த உன்ன மரத்தை வெட்டிச் சாய்த்தான் என்பது மட்டும் தெளிவாகிறது.16 அகப்பாப் போரில் துணையாய் நின்றதோடு மட்டுமன்றி வேறு சில போர்களிலும் இவன் ஈடுபட்டு வெற்றிகண்டான்.

செருப்பல கடந்தான்;17 பகைவரை ஓட்டினான்;18 பகைவர் குழுவை நொறுக்கினான்;19 ஞாயிற்றின்முன் விண்மீன் மறைவது போல இவன்முன் நிற்கமாட்டாது பகைவர் மறைந்தனர்20 என்னும் செய்திகள் அவ் வெற்றிகளைத் தெரிவிக்கின்றன.

தோற்ற மன்னர்கள் இவனுக்குத் திறை தந்தனர்.21 யானைகள் அத்திறைப் பொருள்களில் அடங்கியிருந்தன.22 தன் பகையைத் தேடிக் கொள்வதால் விளையும் தீங்கை, பகைவர்கள் நாட்டை அழிப்பதன் வாயிலாக வெளிப்படுத்திப் பகைநாட்டுக் குடிமக்களையும் உணரும் படி செய்தான்.23 இதனால், மன்னன் விரும்பாவிட்டாலும் பகைநாட்டு மக்கள் தாமே முன்வந்து இவனுக்கும் இறை (வரி) செலுத்தியதுண்டு.24

இவனது வெற்றிகளுக்கு உறுதுணையாய் அமைந்தது இவனுடைய படை. இவனது நாற்படை போரில் தேர்ச்சி பெற்றிருந்தது.25 இவனது வேல், வாள் வீரர்கள் வெற்றி உறுதி தோன்றத் தம் படைக்கருவிகளில் தம் குடிச் சின்னமாகிய போந்தைக் கண்ணியையும் போர் வெற்றிச் சின்னமாகிய வாகைப் பூவையும் தொடக்கத்திலேயே அணிந்து


15. பதிற். 61 : 6

16. உன்னமரம் தன் இலையை உதிர்த்து மன்னனுக்கு நேரவிருக்கும் தீங்கை முன்கூட்டி அறிவிக்கும் மரம் என்றும், அம்மரம் காட்டிய தீக்குறியையும் பகைத்து வெற்றி பெற்றான் - ஊழையும் உப்பக்கம் கண்டான் - என இதற்கு விளக்கம் பெறலாம்.

17. பதிற். பதி. 7 : 5

18. ௸ 7 : 4

19. பதிற். 66 : 4 - 5

20. ௸ 64 : 12 - 13

21. புறம். 387 : 12

22. பதிற். 66 : 7

23. ௸ 69 : 11 - 14

24. ௸ 62 : 12

25. ௸ 69 : 15 - 18