| பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 83 |
இவ்வாறு இவன் கொடை நல்கிய போதெல்லாம் முன்பு கொடுத்தவற்றை நினைத்துப் பார்த்ததில்லை; இவ்வளவு கொடுக்கி றோமே என்று பெருமித உணர்வு தோன்றி மகிழ்வது மில்லை. கொடுக்கும் போதெல்லாம் பெருவள்ளல்.39 மற்றும் இவன் வேள்வி செய்து கொடை வழங்கினான்.40 அவ் வேள்வியில் அந்தணர்களுக்குப் பெறற்கரிய அணிகலன்களைத் தாரை வார்த்துக் கொடுத்தான்;41 கடவுளர்க்கு உணவூட்டினான்; அதனால் ஐயர்கள் இன்புற்றனர்.42 வேள்வி செய்த திருமால் வழிநின்ற புரோகிதனுக்கு ஒகந்தூர் என்னும் நெல் மிகுதியாக விளையும் ஊரையே கொடுத்தான்.43 தன்னைப் பாடிச் சிறப்பித்த புலவர் கபிலர்க்கு நூறாயிரம் காணம் பணமாகக் கொடுத்தான். ‘நன்றா’ என்னும் குன்றின் மீது ஏறி நின்று தன் கண்ணிற்கண்ட இடமெல்லாம் அவருக்குக் காட்டி அவற்றையெல்லாம் அவருக்குப் பரிசாகக் கொடுத்தான்.44 பண்பு நலன் வள்ளன்மைப் பண்புடன் மற்றும் சிலவும் குறிப்பிடத் தக்கனவாய் இவனிடம் அமைந்திருந்தன. இவன் வளமான உள்ளம் படைத்தவன்.45 பார்ப்பார்க்கல்லது பணியாமை, நட்டோர்க்கல்லது கண் அஞ்சாமை, மகளிர்க்கல்லது மார்பு மலராமை, உலகமே பிறழ்ந்தாலும் சொன்ன சொல் தவறாமை ஆகிய பண்புகள் இவனிடம் குடிகொண்டிருந்தன.46 சிறப்புச் செயல்கள் பகைவரை வென்று கிடைத்த கொண்டிப் பொருளை இவன் தமிழ் வளர்க்கும் பணிக்குச் செலவிட்டான்.47 இவன் பல ஊர்களைத் தோற்றுவித்து, நாடோடிகளாகத் திரிந்து வந்த மக்களை நிலைபெற்று வாழும்படி செய்தான்.48
39. பதிற். 61 : 8 40. பதிற். பதி. 7 : 6 - 7 41. பதிற். 64 : 4 - 5 42. ௸ 70 : 18 - 19 43. பதிற். பதி. 7 : 9 44. ௸ கொளு 45. ௸ 7 : 11 46. பதிற். 63 : 6 - 7 47. ௸ 63 : 9 ‘கொண்டி மிகைப்படத் தண்டமிழ் செறித்து’ 48. பதிற். பதி. 7 : 4 `நாடுபதி படுத்து’ |