பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 179 |

(அரசலூர் பிராமி எழுத்து) எழுத்துப் புணர்(ரு)த்தான் மா(லை)ய் வண்ணக்கன் (தேவ)ன் (சாத்த)ன் ஐராவதம் மகாதேவன் அவர்கள் இவ்வெழுத்துக்களை இவ்வாறு படித்துள்ளார்.3 ஏழு தானம் பண்வ (வி)த்தான் மணிய் வண்ணக்கன் (தேவ)ன் (சாத்த)ன் மணிக்கல் வாணிகனாகிய தேவன் சாத்தன் இந்த ஏழு படுக்கைகளைச் (ஆசனங்களை) செய்வித்தான் என்று இதற்கு இவர் விளக்கங் கூறுகிறார். இவர் ‘ஏழு படுக்கைகள்’ என்று கூறுவது தவறு. இக் குகையில் மூன்று படுக்கைகள் மட்டும் இருக்கின்றன. ஆகவே, இவர் ஏழு படுக்கைகள் என்று கூறுவது பிழைபடுகிறது. கல்வெட்டில் ‘எழுத்தும்’ என்னும் வாசகம் தெளிவாகத் தெரிகிறது. டி.வி. மகாவிங்கம் அவர்கள் இவ்வெழுத்துக்களை வேறு விதமாக வாசித்துள்ளார்.4 சித்தம், தீர்த்தம் பூண தத்தான் மாளாய வண்ணக்கன் தேவன் சாத்தன் என்று இவர் படிக்கிறார். இந்தச் சாசன எழுத்துகளில் இரண்டாவது வரியின் வாசகம் வண்ணக்கன் தேவன் சாத்தன் என்பதில் யாருக்கும் யாதொரு ஐயமும். இல்லை. இதை எல்லோரும் கருத்து மாறுபாடு இல்லாமல் சரியாகவே வாசித்திருக்கிறார்கள். முதல் வரி எழுத்துக்களை வாசிப்பதில் மட்டும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வாசித்துள்ளனர். இதுபற்றி ஆய்ந்து பார்த்து இதன் சரியான வாசகம் இன்னதென்பதை நாம் காண்போம். முதல் வரியின் முதல் எழுத்து வட்டமாகவும் நடுவில் புள்ளி யுடனும் காணப்படுகிறது. இது ‘சித்தம்’ என்னும் மங்கலச் சொல்லின் |