| பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 195 |
1. கொற்றக்களஎயி(ல்) 2. மன்று என்று வாசிக்கலாம். கொற்றக் களத்து (கொற்றக்களம் - வெற்றிக்களம்) எயிலைச் சேர்ந்த மன்று என்பது இந்த வாசகத்தின் கருத்து. கொற்றக்களம் என்பது ஒரு இடத்தின் பெயர். கொற்றக்களம் என்னும் ஊரில் இருந்த எயிலுக்கு (கோட்டைக்கு) உரியது இந்த மன்று (குகை). அதாவது, கொற்றக்களத்து எயிலைச் சேர்ந்தவர்கள் இந்த மன்றத்தை முனிவர்களுக்குத் தானமாகக் கொடுத்தார்கள் என்பது இதன் திரண்ட பொருளாகும். புகழூரில் உள்ள இன்னொரு கல்வெட்டெழுத்தைப் பார்ப்போம். இதுவும் மேற்சொன்ன இடத்திலேயே இருக்கிறது. இது சாசன எழுத்து இலாகாவில் 1927 - 28 ஆம் ஆண்டில் 347 ஆம் எண்ணுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த எழுத்து எழுதியுள்ள பாறையில் புரைசலும் புள்ளியும் கலந்திருப்பதனால் சில எழுத்துக்கள் தெளிவாகத் தெரியவில்லை (படம் காண்க). 
இந்த எழுத்துகளை ஐ. மகாதேவன் அவர்கள், ` ... ... ணாகன் மகன் (இ)ளங்கீரன்’ என்று வாசிக்கிறார்.14 இந்தப் பிராமி எழுத்தின் இன்னொரு படம் இவ்வாறு காணப்படுகிறது. 
திரு. டி.வி. மகாலிங்கம் அவர்கள் இதை இவ்வாறு வாசித்திருக்கிறார்.15 ‘ணாகன் மகன் பெருங்கீரன்’. இவர் இவ்வாறு படிப்பது சரியான வாசகமே. நாகன் என்று இருக்கவேண்டியது ணாகன் என்று டண்ணகரத்தில் தொடங்கப்பட்டிருப்பது பிராகிருத பாஷையின் சாயல் என்று இவர் கூறுகிறார். எழுத்தைப் பொறித்த கற்றச்சனுடைய பிழை என்றும் கருதலாம். பிராமி எழுத்துக்களில் ந கரத்துக்கும் ண கரத்துக்கும் மிகச் |