பக்கம் எண் :

202மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

பாலை பாடிய பெருங்கடுங்கோ மருதம் பாடிய இளங்கடுங்கோவுடன் பொருத்துவதற்கும் சான்று இல்லை. வேறு சான்றுகள் கிடைக்கிற வரையில், இவர்களைப் பிணைத்துப் பொருத்திச் சரித்திரத்தில் குழப்பம் உண்டாக்காமலிருப்பதே இப்போதைக்குச் சரி என்று தோன்றுகிறது.

இந்தச் சாசனங்களில் காணப்படுகிற அரசர்கள் கொங்கு நாட்டை யரசாண்ட இரும்பொறையரசர் மரபைச் சேர்ந்தவர் என்பதும் இவர்களும் கொங்கு நாட்டை யரசாண்டவர்கள் என்பதும் திட்டமாகத் தெரிகின்றன. ஆனால், இவர்களின் வரலாறு தெரியவில்லை.

கொங்கு நாட்டு மலைகளில், இன்னும் சில பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் இருக்கும் என்று தோன்றுகிறது. அவற்றைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும். முக்கியமாகக் கொங்கு நாட்டவர் இதுபற்றி முயற்சி செய்வார்களாக.

அடிக்குறிப்புகள்

1.1961 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 4 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை சுதேசமித்திரன். (உள்ளூர்) சென்னை பதிப்பு.

2.Annual Report on Indian Epigraphy for 1961 - 62. P. 10.

3.Corpus of Tamil Brahmi Inscriptions by Iravatham Mahadevan. P. 67. Seminar on Inscriptions 1966.

4.PP. 290 - 298. Early South Indian Palaeography by T.V. Mahalingam. 1967.

5.P. 281-82 Early South Indian Palaeography - 1967.

6.No 66. P. 67. Seminar on Inscriptions, 1966.

7.Page, 283 - 84, Early south Indian Palaeography, 1967.

8.No. 58. P. 66 Seminar on Inscriptions 1966. Historical Tamil Inscriptions. Iravatham Mahadevan. Paper read at the Tamil Conference Ceminar held at Kula Lumpur, 1966.

9.No. 59 page 66. Seminar on Inscriptions 1966. Historical Tamil - Brahmi Inscriptions. (I. Mahadevan. Paper read at the Tamil conference ceminar held at Kula lumpur, 1966.

10.Historical Tamil Brahmi Inscription Kula lumpur, 1966.

11.Historical Tamil Brahmi Inscription.