| பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 201 |
செல்வக்கடுங்கோ வாழியாதன் (7ஆம் பத்து) பெருஞ்சேரலிரும்பொறை | குட்டுவன்இரும்பொறை | | (எட்டாம் பத்து) | இளஞ்சேரலிரும்பொறை | | | (ஒன்பதாம் பத்து) |
எனவே, கல்வெட்டுகளில் கூறப்படுகிற அரசர்களைப் பதிற்றுப்பத்து 7, 8, 9 ஆம் பத்து அரசர்களுடன் பொருத்துவது பொருத்தமாக இல்லை; தவறாகவே இருக்கிறது. (பாலை பாடிய) பெருங்கடுங்கோ, (மருதம் பாடிய) இளங்கடுங்கோ என்னும் இரண்டு சேர அரசர்களைச் சங்க இலக்கியங்கள் கூறுவதை திரு. மகாதேவன் அறியவில்லை. இவ்விரு பெயர்களும் சாசனப் பெயர்களுடன் பொருந்துவது வெளிப்படை. இப்பெயர்களுடன் அவர் பொருந்திக் கூறாமல் அல்லது மறுத்துக் கூறாமல் விட்டது இந்தப் பெயர்களை அவர் அறியாததுதான் காரணம். சங்க காலத்துக் கல்வெட்டுக்களை அறிவதற்குச் சங்க காலத்து இலக்கியங்கள் மிகவும் பயன்படுகின்றன. பாலை பாடிய பெருங்கடுங்கோவும் மருதம் பாடிய இளங்கடுங் கோவும் இக்கல்வெட்டுகளில் கூறப்படுகிற பெருங்கடுங்கோவும் இளங்கடுங்கோவுமாக இருக்கக்கூடுமோ? கல்வெட்டுகளில் கூறப் படுகிற இவர்கள், தந்தையும் மகனும் என்று கூறப்படுகின்றனர். அன்றியும், ‘பாலை பாடிய’, ‘மருதம் பாடிய’ என்னும் அடை மொழிகள் சாசனங்களில் கூறப்படவில்லை. சங்க இலக்கியங்கள் கூறுகிற இவர்கள் தந்தையும் மகனுமா என்று தெரியவில்லை. பாலை பாடிய பெருங்கடுங்கோ, மருதம் பாடிய இளங்கடுங்கோ இருவரை யும் சாசனங்கள் கூறுகிற பெருங்கடுங்கோ இளங்கடுங்கோவுடன் பொருத்திக் கூறலாம் என்று தோன்றுகிறது. ஆனால், உறுதியாகத் துணிந்து கூற இயலவில்லை. எனவே, புகழூர்ச் சாசனங்கள் குறிப்பிடுகிற கோ ஆதன் சேரலி ரும்பொறை, அவன் மகன் பெருங்கடுங்கோன், அவன் மகன் இளங் கடுங்கோன் ஆகிய மூவரையும் பதிற்றுப்பத்து 7, 8, 9 ஆம் பத்துகளின் அரசர்களாகிய செல்வக்கடுங்கோ வாழியாதன், தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை, இளம்சேரலிரும்பொறை என்பவர் களுடன் பொருத்துவதற்குப் போதிய சான்று இல்லை. அதுபோலவே, சாசனங்கள் கூறுகிற பெருங்கடுங்கோன் இளங்கடுங்கோன் என்பவரைப் |