210 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 |
யிருந்தது. அஃதாவது ஆந்திரதேசம் தொண்டைமண்டலம் சோழ மண்டலம் ஆகிய மூன்று நாடுகளைக் கொண்டிருந்தது. சிம்மவிஷ்ணுவின் மகனாகிய மகேந்திரவர்மன் இளவரசனாக இருந்தபோது ஆந்திரநாட்டிலே தங்கியிருந்தான். தெலுங்கு நாட்டிலே குண்டூர் மாவட்டத்திலே சேஜர்லா என்னும் இடத்தில் உள்ள கபோதே சுவரன் கோவில் சாசனம் ஒன்று, மகnதிரவர்மன் அக்கோயிலில் திருப்பணி செய்ததைக் கூறுகிறபடியினாலே இளவரசனாக இருந்த போது இவன் தெலுங்கு நாட்டில் இருந்தான் என்பது நன்கு தெரிகிறது. சிம்மவிஷ்ணு ஏறக்குறைய கி. பி. 600 இல் காலமானான். பிறகு, அவன் மகனான மகேந்திரவர்மன் அரசன் ஆனான். மகேந்திரவர்மன் ஏறக்குறைய கி. பி. 600 முதல் 630 வரையில் அரசாண்டான். பல்லவ அரச குடும்பத்தில் ம்கேந்திரன் என்னும் பெயர் உடை யவர்களில் இவன் முதல்வன். ஆகையினாலே சரித்திரத்தில் இவன் மகேந் திரவர்மன் முதலாவன் (மகேந்திரவர்மன் ஐ) என்று கூறப்படுகிறான். மகேந்திரவர்மன், தன் தலைநகரான காஞ்சிபுரத்தில் இருந்து அரசாண்டான். மகேந்திரன் காலத்தில் பல்லவ இராச்சியத்தின் வட எல்லை குறைந்துவிட்டது. எப்டி என்றால், வாதாபி (பாதாமி) என்னும் ஊரைத் தலைநகரமாகக் கொண்டு அரசாண்ட சளுக்கிய அரசனாகிய இரண்டாம்புலிகேசி (இவன் கி. பி. 609 முதல் 642 வரையில் அரசாண்டான்) கி. பி. 610 இல் பல்லவ இராஜ்ஜியத்தின் மேல் படையெடுத்து வந்து ஆந்திர தேசத்தைக் கைப்பற்றிக் கொண்டான். அல்லாமலும் பல்லவரின் தலைநகரமான காஞ்சிபுரத்தின் மேலும் படையெடுத்து வந்தான். ஆனால், மகேந்திரவர்மன் புள்ளலூர் என்னும் இடத்தில் புலிகேசியை எதிர்த்துப் போரிட்டு அவனை முறியடித்துத் துரத்திவிட்டான். காசாகுடி செப்புப் பட்டயம் மகnதிரனுடைய வெற்றியை இவ்வாறு கூறுகிறது: “அதன் பிறகு மகேந்திரனுடைய புகழைப் போன்று புகழ் படைத்தவனும் ஆணையைச் செலுத்துபவனும் புள்ளலூரில் தன் பகைவரைப் புறங்கண்டவனுமான மகேந்திர வர்மன் என்னும் அரசன் மண்ணுலகத்தை அரசாண்டான்.”1
1. S. I. I. Vol II. Page, 342 - 361 |