பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 211 |
‘மகேந்திரன் வென்ற அரசன் யார்?’ என்று இந்தப் பட்டயம் கூறவில்லை. ஆனால், இரண்டாம் புலிகேசி யைத்தான் இந்தச் சாசனம் குறிப்பிடுகிறது என்று தெரிகிறது. ஏனென்றால், அய்ஹொளெ சாசனம் புலிகேசியை இவ்வாறு புகழ்கிறது: “அவன் (புலிகேசி), தன்னுடைய சேனையின் தூசியினாலே தன்னை எதிர்த்த பல்லவ மன்னனுடைய ஆற்றலை மழுங்கச்செய்து அவனைக் காஞ்சிபுரத்தின் மதிலுக்குள் மறையும்படி செய்தான்.” (செய்யுள் 20) “பல்லவர்களின் சேனையாகிய குளிர்ந்த பனிக்குக் கடுஞ் கிரணமுள்ள சூரியனைப்போன்ற அவன் (புலிகேசி, சோழ பாண்டிய கேரளர்களுக்குப் பெரும் மகிழ்சியையுண்டாக்கினான்.” (செய்யுள். 31)2 இந்தச் சாசனங்கள் இவ்வாறு கூறுவதிலிருந்து மகேந்திர வர்மனுடன் போர் செய்த சளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசி என்பது ஐயமற விளங்குகிறது. மகேந்திரவர்மன் புலிகேசியுடன் போர் செய்து வெற்றிகொண்ட இடமாகிய புள்ளலூர், செங்கற்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம் தாலுகாவில் காஞ்சிபுரத்திற்கு வடக்கே 15 மைல் தூரத்தில் இருக்கிறது. சளுக்கிய அரசனான புலிகேசியை மகேந்திரன் முறியடித்துத் துரத்திவிட்ட போதிலும், பல்லவநாட்டின் ஆந்திரப் பகுதி புலிகேசியின் வசமாயிற்று. தான் கைப்பற்றிய ஆந்திரநாட்டில், தன் தம்பியாகிய விஷ்ணுவர்த்தனனைப் புலிகேசி இளவரசனாக்கினான். வெங்கி என்னும் நகரத்தில் இளவரசனாக அமர்ந்த விஷ்ணுவர்த்தனன், தன்னைப் புலிகேசி இளவரசனாக்கினான். வெங்கி என்னும் நகரத்தில் இளவரச னாக அமர்ந்த விஷ்ணுவர்த்தனன், பிற்காலத்தில் தனி அரசனாகப் பிரிந்து கீழைச் சளுக்கிய வம்சத்தை உண்டாக்கினான். ஆகவே, பாதாமியைத் தலை நகரமாகக் கொண்டிருந்த மூல சளுக்கிய வம்சம், மேலைச் சளுக்கிய வம்சம் என்று சரித்திரத்தில் பெயர் பெறுவதாயிற்று. புலிகேசி, பல்லவ இராச்சியத்தின் ஆந்திரப் பகுதியை வென்று கொண்டபடியினாலே, மகேந்திரனுடைய பல்லவ இராச்சியம், வடக்கே வட பெண்ணையாற்றிலிருந்து தெற்கே புதுக்கோட்டை வரையில் தொண்டைமண்டலத்தையும் சோழ மண்டலத்தையும் கொண்டதாக
2. S. I. I. Vol IV. Page, 11. |