பக்கம் எண் :

252மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

னுடைய உருவச்சிற்பம் பட்டமகிஷியரோடு அமைந்துள்ளது. அங்கே யுள்ள இன்னொரு சிற்பமும் (சிம்ம விஷ்ணுவின் சிற்பம்) பட்டமகிஷிய ரோடு அமைக்கப்பட்டிருக்கிறது. மாமல்லபுரத்து அர்ச்சுன இரதத்தில் இருக்கிற பல்லவ அரசரின் சிற்ப உருவமும, உத்தரமேரூர் மாடக் கோயிலில் இருக்கிற மற்றொரு பல்லவ அரசனுடைய சிற்ப உருவமும் பட்டமகிஷியருடன் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த நரசிம்ம வர்மனுடைய உருவச்சிற்பம் மட்டும் பட்டமகிஷியில்லாமல் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இச் சிற்ப உருவம் அமைக்கப்பட்ட காலத்தில் பட்டமகிஷி இறந்துவிட்டாள் போலும்.

அடிக்குறிப்புகள்

1.Ind. Atni. Vol. IX. P. 199.

2.S.I.I. Vol. I. குறிப்பு. இந்தச் சிறப்புப் பெயர்களுடன் இந்தக் கற்கோயிலில் அத்யந்தகாம என்னும் இன்னொரு பெயரும் இன்னொருவகையான எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்தப் பெயர் நரசிம்ம வர்மனுடைய பேரனான பரமேஸ்வரவர்மனைக் குறிக்கும்.

3.புடைப்புச் சிற்பம் - Bas relief.