பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு251

நரசிம்மவர்மன் காலத்தில் ஹியூங் சுவாங் என்னும் சீன நாட்டுப் பௌத்த யாத்திரிகர் கி. பி. 640-இல் காஞ்சிபுரத்துக்கு வந்து சிலகாலம் தங்கியிருந்தார்; இவன் காலத்திலே சைவ சமயாசாரியர்களான, திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சிறுத்தொண்ட நாயனார், நெடுமாற நாயனார், மங்கையர்க்கரசியார், குலச்சிறை நாயனார், திருநீல கண்டப்பெரும்பாணர், திருநீலநக்கர், முருக நாயனார் முதலியோரும், முதலாழ்வார் மூவரும், திருமழிசை ஆழ்வாரும் வாழ்ந்திருந்தார்கள்.

நரசிம்மவர்மன் சைவ சமயத்தைச் சார்ந்தவன். இவன் தன் வாழ் நாட்களில் பெரும்பாகத்தைச் சளுக்கிய அரசனுடனும் மற்ற அரசர் களுடனும் போர் செய்வதிலே கழித்தான். ஆயினும், மாமல்ல புரத்திலே “இரதங்கள்” என்று கூறப்படுகிற பாறைக் கோயில்களையும் சில குகைக் கோயில்களையும் அமைத்தான். தர்மராச ரதம் என்று இப்போது வழங்கப்படுகிற அத்யந்தகாம பல்லவேசுவரம் என்னும் மாடக் கோயிலிலே பாறைச் சுவரிலே இவனுடைய உருவம்3 புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த உருவத்தில் நரசிம்மவர்மன் (மாமல்லன்) நீண்ட கிரீடம் அணிந்து, காதுகளில் அணிந்த குண்டலங்கள் தோள்களிலே புரள, கழுத்தில் மணி மாலை விளங்க, மார்பிலே தடித்த பூனூலை அணிந்திருக்கிறான். இடக் கையை இடுப்பில் ஊன்றி வலக் கையைத் தொங்கவிட்டிருக்கிறான். அரையில் மட்டும் பட்டாடை அணிந்திருக்கிறான். அக்காலத்து வழக்கப்படி (போர்வை சட்டை முதலியன அணியாமல்) வெற்றுடம் பாக இருக்கிறான். அகன்று பரந்த முகத்தில் அமைதியும் மன உறுதியும் ஆழ்ந்த சிந்தனையும் தோன்றுகின்றன. பாதங்கள் முற்றுப்பெறாமல் பாறையோடு பாறையாகக் காணப்படுகின்றன. இந்தச் சிற்பத்தை அமைத்த சிற்பி எக்காரணத்தினாலோ பாதங்களை முற்றும் அமைக்காமல் அரைகுறையாக விட்டுவிட்டான்.

நரசிம்மவர்மனுடைய இந்தச் சிற்ப உருவம் பட்ட மகிஷியில் லாமல் தனியாக அமைக்கப்ட்டுள்ளது. பல்லவ அரசர்களின் உருவச் சிலைகள் எல்லாம் பட்டமகிஷியரோடு அமைக்கப்பட்டுள்ளன. மாமல்ல புரத்து வராகப் பெருமாள் குகைக்கோயிலில் இருக்கிற மகேந்திரவர்ம