பக்கம் எண் :

  :

2. வேறு அரசர்கள்

மாமல்லன் ஆன நரசிம்மவர்மன் காலத்திலே, பல்லவ தேசத்தைச் சூழ்ந்திருந்த இராச்சியங்களைப் பற்றியும் அவற்றை அரசாண்ட அரசர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

வடநாடு

அக்காலத்தில் வடஇந்தியாவை அரசாண்ட மன்னன் ஹர்ஷ வர்த்தனன் என்பவன். இவனுடைய இராச்சியம் வடக்கே இமய மலையிலிருந்து தெற்கே நருமதை ஆறுவரையிலும் பரவியிருந்தது. அக்காலத்தில் பரதகண்டத்து அரசர்களில் பேரரசனாக விளங்கியவன் ஹர்ஷவர்த்தனனே. இவன் கி.பி. 606 முதல் 647 வரையில் அரசாண்டான். இவன் இறந்தபிறகு இவனுடைய பேரரசு சிறு சிறு நாடுகளாகச் சிதறுண்டு போயிற்று. ஹர்ஷனுக்கு மக்கட் பேறு இல்லை. ஆகவே, அவனுடைய இராச்சியத்தை அவனுக்குக் கீழடங்கியிருந்த அரசர்கள் சுயேச்சையாக அரசாளத் தொடங்கினார்கள். ஹர்ஷ னுடைய அமைச்சனான அருணாஸ்வன் (அர்ச்சுனன்) என்பவனும் இராச்சியத்தின் ஒருபகுதியைத் தன்வயப்படுத்திக் கொண்டான்.

சீனநாட்டு அரசன், ஹர்ஷவர்த்தனனிடம் தன் தூதர்களை அனுப்பினான். அத்தூதர்கள் இந்தியாவுக்கு வந்தபோது ஹர்ஷன் இறந்துபோய், அவன் மந்திரி அருணாஸ்வன், ஆட்சிசெய்து கொண் டிருந்தான். இவன் சீனத் ஷத்தர்களைக் கொன்றுவிட்டான். ஆனால், துதர்களின் தலைவனாகிய வாங்-ஹூன்-த்ஸி1 என்பவன் தப்பி ஓடித் திபெத்து நாடு சென்றான். திபெத்து நாட்டரசன் சீனமன்னனின் உறவின னாகையால், அவன் சீனத்தூதுவனுக்குத் தன் சேனையைக் கொடுத்து உதவினான். தூதுவன், சேனையுடன் வந்து அருணாஸ்வனுடன் போர் செய்து வென்று அவனைச் சிறைப்பிடித்துச் சென்றான். நரசிம்மவர்மன் காலத்தில் வட இந்தியாவில் நிகழ்ந்த செய்தி இது.

தக்கிணநாடு

ஹர்ஷ இராச்சியத்திற்குத் தெற்கே தக்கிண இந்தியாவைச் சளுக்கியர் அரசாண்டனர். சளுக்கிய இராச்சியம், வடக்கே நருமதை