| 268 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 |
தமிழத் தலைவனாகிய பொத்தகுட்டன், இளவரசனாக இருந்த தாட்டாசிவன் என்பவனைச் சிறையில் அடைத்து விட்டு, தத்தன் என்பவனை அழைத்து வந்து அவனுக்கு முடிசூட்டி இலங்கைக்கு அரச னாக்கினான். இந்தத் தத்தன் இலங்கை யரசரின் பரம்பரையைச் சேர்ந்தவன்; தனபிட்டி என்னும் ஊரில் இருந்தவன். இரண்டு ஆண்டுகள் அரசாண்ட பிறகு இந்தத் தத்தன் காலமானான். ஆகவே பொத்த குட்டன், உணாநகரத்தில் இருந்த ஹத்ததாட்டன் என்பவனை அழைத்து அவனுக்கு முடிசூட்டி அவனை இலங்கைக்கு அரசனாக்கினான். ஹத்ததாட்டன் அரசாட்சியை ஏற்றுக்கொண்ட ஆறாம் திங்களில், நரசிம்மவர்மனிடம் அடைக்கலம் புகுந்திருந்த மானவர்மன், பல்லவச் சேனையுடன் இரண்டாம் முறையாக இலங்கையின்மேல் படையெடுத்து வந்தான். ஹத்ததாட்டன், பொத்தகுட்டன் உதவியுடன் மானவர்மனை எதிர்த்துப் போரிட வந்தான். இருவர் சேனையும் ஒன்று சேர்ந்தால் எதிர்த்துப போரிட முடியாததென்பதையறிந்த மானவர்மன், பொத்தகுட்டன் சேனையையும் ஹத்ததாட்டன் சேனையையும் ஒன்று சேராதபடி பிரித்துவைத்து ஹத்ததாட்டனுடன் போர்செய்து உயிர் இழந்தான். மானவர்மன் இலங்கைக்கு அரசனானான். மானவர்மன் வெற்றியடைந்த படியினாலே, பொத்த குட்டன் மலைய நாட்டிலுள்ள மேருகுண்டாம் என்னும் ஊருக்குப் போனான். மேருகுண்டரத்தை யரசாண்ட சிற்றரசன், பொத்த குட்டனுடைய உயிர் நண்பன். இவன் இப்போது தர்மசங்கடமான நிலையை யடைந்தான். எப்படியென்றால், மானவர்மன் இப்போது இலங்கைக்கு மன்னனாய் விட்டான். அவனுக்குப் பகைவனாகிய பொத்தகுட்டனுக்கு அடைக் கலங்கொடுத்துத் துரோகம் செய்ததாகும். இந்தத் தர்மசங்கட நிலையில் அகப்பட்ட இந்த உத்தமன், தன் நண்பனுக்கும் துரோகம் செய்யாமல், அரச துரோகத்துக்கும் உட்படாமல், தன் உயிரையே மாய்த்துக் கொள்ளத் துணிந்தான். தன் நண்பனான பொத்தகுட்டனை வரவேற்றுத் தன் இல்லத்தில் இடங்கொடுத்தான். பிறகு, நஞ்சு இடப்பட்ட அப்பத்தைத் தின்று தன் உயிரைவிட்டான். இவன் இவ்வாறு செய்ததைப் பின்னர் அறிந்த பொத்தகுட்டன், தானும் நஞ்சுகலந்த அப்பத்தை உண்டு உயிர்நீத்தான். தான் விரும்பிய படி யெல்லாம் இலங்கையரசர்களை அமைத்து இலங்கை ஆட்சியை |