பக்கம் எண் :

286மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

இருந்தவராதல்வேண்டும். ஏனைய ஆதாரங்களை ஒத்திட்டுப் பார்க்குமபோது, பூதத்தாழ்வார், நரசிம்மவர்மன் காலத்திலே, மாமல்லபுரம் என்னும் பெயர் ஏற்பட்ட காலத்திலேயே இருந்தவராகத் தெரிகிறார். ஆகவே, பூதத்தாழ்வாரும் அவருடன் நண்பர்களாக இருந்த பொய்கை யாழ்வார் பேயாழ்வார் திருமழிஐசயாழ்வார் ஆகிய ஏனைய மூன்று ஆழ்வார்களும் கி.பி. 7 ஆம் நூற்றாண்டிலே வாழ்நதிருந்தவர் என்பது தெரிகிறது. இதே கருத்தைத் திரு. கோபி நாதராயரும் கொண்டுள்ளார்.1

பூதத்தாழ்வார் தாம் பிறந்த மாமல்லபுரத்தை மாமல்லை என்று வெளிப்படையாகக் கூறியிருக்க, மு. இராகவையங்கார் அவர்கள் தமது ஆழ்வார்கள் காலநிலை என்னும் நூலில், மல்லை என்பதை மா என்னும் அடைமொழியுடன் ஆழ்வார் கூறினார் என்று பண்டிதர் முறையில் வலிந்து பொருள் கூறுகிறார். அவர் கூறுவது இது: “மல்லை என்றும் அவ்வூர் ஆழ்வார் திருவாக்குகளில் வழங்குகின்றது. `மாமல்லை கோவல்மதிற் குடந்தை’ என்று பூதத்தாழ்வார் அருளிய தொடருள் `மல்லை’ என்பதற்குக் கொடுககப்பட்ட விசேடணம்:

“நீளோதம், வந்தலைக்கு மாமயிலை மாவல்லிக் கேணியான்”

என்ற திருமழிசைப்பிரான் வாக்கிற்போல வந்த அடை சொல்லாககட் கொள்ளற்குரியதன்றி, மாமல்லபுரம் என்பதன் திரிபாகவே கொள்ள வேண்டும் என்னும் நியதியில்லை.2

இவ்வாறு மாமல்லை என்பது மாமல்லபுரம் என்பதன் திரிபு அல்ல என்றும், மாமல்லை என்பதில் மா என்பது விசேடணம் (அடைமொழி) என்றும் வலிந்து பொருள் கூ றுகிறார் அய்யங்கார். அப்படியானால், பூதத்தாழ்வார்.

“மாமல்லை மாகோவல் மாக்குடந்தை என்பரே”

என்று கூறாமல்,

“மாமல்லை கோவல் மதிட்குடந்தை என்பரே”

என்று ஏன் கூறினார்? மல்லைக்குக் கொடுத்த மா என்னும் அடையைக் கோவலுக்கும் குடந்தைக்கும் ஏன் கொடுக்கவில்லை?

இந்த ஐயம் அவருக்கும் ஏற்பட்டுப் பிறகு மாமல்லை என்பது மாமல்லபுரமாகத்தான் இருக்க வேண்டும் என்னும் முடிவுக்கு வருகிறார். அவர், அதே ஆழ்வார்கள் காலநிலை என்னும் நூலில் 32 ஆம் பக்கத்தில் இவ்வாறு எழுதுகிறார்: