பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 289 |
பொய்கையார் வேறு; முதல் திருவந்தாதி பாடிய பொய்கையாழ்வார் வேறு என்பது வெள்ளிடை மலைபோல் தெரிகிறது. ஆனால், பொருந்தாக் காரணத்தைப் பொருத்திக்கூறி இருவரும் ஒருவரே என்று சொல்பவரும் உளர். “.....சோழன் கோச் செங்கணானைக் களவழி நாற்பது என்ற நூலாற் புகழ்ந்த பொய்கையார், மேற்கூறிய தமிழ் முனிவரான பொய்கையாழ்வாராகவே இருத்தல் கூடும் என்பது என் கருத்து” என்று மு. இராகவையங்கார் அவர்கள் கூறுகிறார்கள்.1 கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்று அய்யங்கார் அவர்கள் கருதுகிற பொய்கையார் என்னும் புலவரே பொய்கை யாழ்வாராக இருப்பாரானால், கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் இருந்த பூதத்தாழ்வாருடன் அவர் எப்படி நண்பராக இருக்க முடியும்? பூதத்தாழ்வார் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் இருந்தவர் என்று மேலே காட்டினோம். ஆகவே அவருடன் நண்பராக இருந்த பொய்கையாழ்வாரும் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக வேண்டும். எனவே, சோழன் செங்கணானைப் பாடிய பொய்கையார் என்னும் புலவரே பொய்கையாழ்வாராக இருக்க முடியாது. பொய்கையார் என்னும் பெயரையுடையவர் பலர் வெவ்வேறு காலத்தில் இருந்திரக்கிறார்கள். களவழி நாற்பது பாடிய பொய்கை யாரை யன்றி, பன்னிருபாட்டியல்என்னும் நூலில் காணப்படுகிற இலக்கண சூத்திரங்களை எழுதிய பொய்கையாரும், யாப்பருங்கல விருத்தியில் மேற்கோள் காட்டப்படுகிற செய்யுள்களைப் பாடிய பொய்கையாரும், இன்னிலை என்னும் நூலைப் பாடியவர் என்று கூறப்படுகிற பொய்கை யாரும் இவ்வாறு பல பொய்கையார்கள் இருந்திருக்கின்றனர். பொய்கையார் என்னும் பெயர் முறகாலத்தில் மக்கள் பெயராகப் பலருக்கு வழங்கி வந்துள்ளது. ஆகவே பெயர் ஒற்றுமையை மட்டும்ஆதாரமாகக் கொண்டு சங்ககாலத்துப் பொய்கை யாரையும் நரசிம்மவர்மன் காலத்துப் பொய்கையாரையும் ஒருவரே என்று கூறுவது பொருந்தாது. 7 ஆம் நூற்றாண்டில் இருந்த பூதத்தாழ்வாரின் நண்பர் என்று கூறப்படுகிறப்படியால் பொய்கை யாழ்வாரும் இக்காலத்திலேதான் இருந்திருக்க வேண்டும். மற்றொரு நண்பரான பேயாழ்வாரும் இக்காலத்தில் இருந்திருக்க வேண்டும். |