பக்கம் எண் :

288மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

II

பூதத்தாழ்வார் காலத்தில் மேலே ஆராய்ந்து, அவர் காலம் நரசிம்மவர்மன் காலம் என்று கூறினோம். அவருடன் அவர் காலத்தில் இருநத பொய்கையாழ்வாரைப் பற்றிய சில ஐயங்களைப் பற்றி இங்கு ஆராய்வோம். நரசிம்மவர்மன் காலத்தில் இருந்த பொய்கை ஆழ்வாரும், கடைச்சங்ககாலத்தின் இறுதியில் இருந்த களவழி நாற்பது பாடியவரும் ஆன பொய்கையாரும் ஒருவரே என்றும், ஆகவே பொய்கையாழ்வார் கடைச்சங்க காலத்தின் இறுதியில் இருந்தவர் என்றும் சிலர் கருதுகீறார்கள். பொய்கை என்னும் பெயர் ஒற்றுமை ஒன்றைமட்டும் சான்றாகக்கொண்டு இவ்வாறு கூறுகின்றனர். இது பொருந்தாது.

சங்ககாலத்தின் கடைசியில் இருந்த பொய்கையார், சேரமான் கணைக்கால் இரும்பொறை என்னும் சேர அரசனுடைய அவைப்புலவர். இவரே கோக்கோதை மார்பன் என்னும் சேர அரசனையும் பாடியிருக்கிறார். (புறம். 48, 49). சோழன் செங்கணான், கணைக்கால் இரும்பொறையைப் போரில் வென்று பிடித்துச் சிறைவைத்தபோது, அவனைச் சிறை மீட்பதற்காகப் பொய்கையார் களவழி நாற்பது பாடினார். அரசரைப்பாடி அரசரிடம் ஊழியம் செய்து வாழ்ந்தவர் பொய்கையார் என்னும் புலவர்.

பொய்கையாழ்வாரோ, மானிடரைப் பாடாதவர். திருமாலைத் தவிர வேறு ஒருவரையும் மறந்தும் பாடாதவர். இதனை இவரே தெள்ளத் தெளியக் கூறுகிறார்:

“திருமாலை யல்லது தெய்வமென் றேத்தேன்”

என்றும்.1

“நாடிலும் நின்னடியே நாடுவன் நாள்தோறும்
பாடினும் நின்புகழே பாடுவன்”

என்றும்,2

“மாயவனை யல்லால் இறையேனும் ஏத்தாது என்நா.”

என்றும்,3

பொய்கையாழ்வார் கூறுவது காண்க. ஆகவே, களவழி நாற்பது பாடிய