பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 299 |
அக்காலத்திலேயே சீவக சிந்தாமணியும் இயற்றப்பட்டிருக்கவேண்டும் என்பது தெரிகிறது. மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் சாசனங்களும் செப்பேடு களும் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவன் காலத்தில் எழுதப்பட்ட சாசனங்களும் செப்பேடுகளும் இதுகாறும் கிடைக்க வில்லை. அவன் காலத்தில் எழுதப்பட்ட ஒரே ஒரு தமிழ்ச்சாசனம் மட்டும் நமக்குக் கிடைத்திருக்கிறது. அது, திருக்கழுக்குன்றத்து மலைமேல் உள்ள ஒற்றைக்கல் மண்டபம் என்று கூறப்படுகிற குகைக்கோயிலில் எழுதப்பட்டுள்ள சாசனம் ஆகும். அச் சாசனத்தின் அமைப்பைக் கீழே காண்க. அதிலிருந்து அக் காலத்துத் தமிழ் எழுத்து எப்படியிருந்தது என்பதை ஒருவாறு தெரிந்து கொள்ளலாம். 
|