பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 305 |
மக்களுக்குப் போதிய அளவு கிடைக்காமல் சேனைகளுக்கு அதிகப் பகுதி செலவாயிருக்கும். மழை பெய்யாமலும் விளைச்சல் குன்றி யிருக்கும். பௌத்தமதமும் சமண சமயமும் பெருகியிருந்த படியினாலே, இந்த மதங்களில் துறவிகள் அதிகமாக இருந்தபடியால், உணவுப் பண்டங்களை உண்டாக்கும் தொழிலில் ஆட்கள் குறைந்து உணவுப் பண்டங்கள் உற்பத்தி செய்ய முடியாமலிருக்கலாம். அதுபோல, பிராமணர்கள் உழவுத்தொழில் முதலிய முக்கியத் தொழில்களில் ஈடுபடாமல் இருந்தனர். வேறு நாடுகளிலிருந்து உணவுப் பொருள் களைக் கொண்டுவரப் போக்குவரவு சாதனங்கள் குறைவாகவும் தாமதமாகவும் இருந்தது. மற்றொரு காரணமாகும். போர்களினாலே நிலங்கள் அழிக்கப்பட்டதும் ஒரு காரணமாகும். இவ்வாறு பல காரணங்களினாலே அக் காலத்தில் பஞ்சம் உண்டாகியிருக்கக்கூடும். அடிக்குறிப்புகள் 1.திருநாவுக்கரசர்: 255, 256, 258. 2.திருஞானசம்பந்தர் புராணம் - 562. 3.திருஞானசம்: 564. 4.C. Minakshi: Administration and Social life under the Pallavas. PP. 117, 118., K.A.N. Sastri. Pandian Kingdom. |