304 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 |
“உலகியல்பு நிகழ்ச்சியால் அணைந்த துய உறுபசிநோய் உமையடையா தெனினும் உம்பால் நிலவுசிவ நெறிசார்ந்தோர் தம்மைவாட்டம் நீங்குதற்கு உத்தமமோர் காசு நீடும் இலகுமணிப்பீடத்துக் குணக்கு மேற்கும் யாமளித்தோம் உமக்கிந்தக் காலந் தீர்ந்தால் அலகில் புகதீர்! தவிர்வதாகும் என்றே அருள்புரிந்தார் திருவீழிமிழலை ஐயர்.3 அடுத்தநாள் காலையில் கோவிலுக்குச் சென்றபோது இரண்டு பொற்காசுகள் பலிபீடத்தில் இருப்பதை இருவரும் கண்டார்கள். அக் காசைக்கொண்டு இருவரும் தத்தம் மடத்தில் சிவனடியார்களுக்கு அமுது ஊட்டுவித்தனர். இவ்வாறு பஞ்சம் நீங்கும் வரையில் நாள் தோறும் இவர்களுக்குப் பொற்காசு கிடைத்து வந்தது. இந்த வற்கடமும் பஞ்சமும் கி. பி. 640-க்கு 650-க்கும் இடைப் பட்ட காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். சம்பந்தரும் அப்பரும் குறிப்பிடுகிற பஞ்சம் இரண்டாம் நரசிம்ம வர்மனான இராஜசிம்மன் காலத்தில் ஏற்பட்டது என்று சிலர் கூறுவர்.4 இவர்கள், அப்பரும் சம்பந்தரும் இராஜசிம்ம பல்வன் காலத்தில், கி. பி. 8-ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்று கருதுகிறார்கள். இராஜசிம்மன் காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தையே இவர்கள் தமது தேவாரத்தில் குறிப்பிடுவதாக இவர்கள் கருதிக்கொண்டு, அப்பரும் சம்பந்தரும் இவ் வரசன் காலத்தில் கி. பி. 8-ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்று கூறுகிறார்கள். ஆனால் கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் முதலாம் மகேந்திர வர்மன் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் அப்பரும் சம்பந்தரும் இருந்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதனால் இவர்கள் கூறுவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. பஞ்சங்கள் பல காலங்களில் ஏற்படக்கூடும். இராஜசிம்மன் காலத்துப் பஞ்சத்தை இவர்கள் தேவாரத் தில் குறிப்பிடுகிறார்கள் என்றும் ஆகவே இவர்கள் இராஜசிம்மன் காலத்தவர் என்றும் முடிவுகட்டுவது, ஏனைய சான்றுகளுக்கு மாறுபட்ட கருத்தாகும். அக்காலத்தில் பஞ்சங்கள் அடிக்கடி ஏற்பட்ட தற்குக் காரணம் சில உண்டு. அடிக்கடி அரசர்கள் போர் செய்தபடி யினாலே, பயிர்த்தொழில் கவனிக்கப்படாமல், குடியானவர் சேனையில் சேர்ந்திருக்கக்கூடும். போரினால், உணவுப் பொருள்கள் |