| பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 303 |
கையில் மானும் மழுவுமுடன் காணக் கனவில் எழுந்தருளிச் செய்ய சடையார் திருவீழி மிழலையுடையார் அருள்செய்வார்.” “கால நிலைமை யால் உங்கள் கருத்தில் வாட்டமுறீர் எனினும் ஏல உம்மை வழிபடுவார்க் களிக்க அளிக்கின் றோம்என்று கோலங் காண எழுந்தருளிக் குலவும் பெருமை இருவர்க்கும் ஞாலம் அறியப் படிக்காசு வைத்தார் மிழலை நாயனார்.” “விண்ணின் றிழிந்த விமானத்தின் கிழக்கும் மேற்கும் பீடத்தில் அண்ணல் புகலி ஆண்டகையார் தமக்கும் ஆண்ட அரசினுக்கும் நண்ணும் நாள்கள் தொறுங்காசு படிவைத் தருள நானிலத்தில் எண்ணில் அடியார் உடன்அமுது செய்தங் கிருந்தார் இருவர்களும்.”1 “மண்ணின்மிசை வான்பொய்த்து நதிகள் தப்பி மன்னுயிர்கள் கண்சாம்பி உணவு மாறி விண்ணவர்க்குஞ் சிறப்பில்வரும் பூசை யரற்றா மிக்க பெரும் பசிஉலகில் விரவக்கண்டு பண்ணமரும் மொழியுமையாள் முலையின் ஞானப் பாலறா வாயருடன் அரசும் பார்மேல் நண்ணுதலான் திருநீற்றுச் சார்வினோர்க்குங் கவலைவருமோ என்று கருத்திற் கொண்டார்.”2 அப்போது சிவபெருமான் இவர்கள் கனவில் தோன்றி இவ்வாறு உரைத்தாராம்: |