பக்கம் எண் :

302மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

என்றும் திருநாவுக்கரசர், நாட்டில் அரசர்கள் சீறிப் போர் செய் ததையும் மழைபெய்யாமல் பஞ்சம் உண்டானதையும் குறிப்பிடுகிறார். திருஞானசம்பந்தர்,

“விலங்கலமர் புயல் மறந்து முன்சனிபுக்கு
      ஊன் சலிக்கும் காலந்தானும்
கலங்கலிலா மனப் பெருவண்மை யுடைய
      மெய்யர் வாழ் கழுமலமே.”

என்று, வானத்தில் கோள் மாறியபடியினால் மழை பெய்யாமல் வற்கடம் ஏற்பட்டதைக் குறிப்பாகக் கூறுகிறார்.

இவ்விரு நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் பெரிய புராணம், இவ் விருவரும் திருவீழிமிழலையில் தங்கியிருந்த போது வற்கடம் நேரிட்டதென்றும், அதற்காக நாயன்மார்கள் இருவரும் கவலைகொள்ள சிவபெருமான் இவர்களுக்குப் பொற்காசு நாள்தோறும் கொடுத்து வந்தார் என்றும், அக்காசைக் கொண்டு இருவரும் தத்தம் மடங்களில் நாள்தோறும் அடியார்களுக்கு அமுதளித்தார்கள் என்றும், பஞ்சம் நீங்கும் வரையில் சிவபெருமான் இவர்களுக்குப் பொற்காசு அளித்து வந்தார் என்றும் கூறுகிறது:

“சீரின் விளங்கும் திருத்தொண்டர் இருந்து
      சிலநாட் சென்றதற் பின்
மாரிசுருங்கி வளம் பொன்னி நதியும்
      பருவம் மாறுதலும்
நீரின் இயன்ற உணவருகி நிலவும்
      பலமன் னுயிர்க ளெலாம்
பாரின் மலிந்த இலம்பாட்டில் படர்கூர்
      வறுமை பரந்ததால்.”

“வையம் எங்கும் வற்கடமாய்ச்
      செல்ல உலகோர் வருத்தழற
நையும் நாளில் பிள்ளையார்
      தமக்கும், நாவுக்கரசருக்கும்