பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு313

காவிரி வளநாடன் என்றும், தொண்டையர் வேந்தன் கோனாடன் என்றும் நந்திக் கலம்பகம் கூறுவதிலிருந்தும் இவனுடைய சாசனங்களைக் கொண்டும் இதனை அறியலாம்.

நந்திவர்மனைக் “குமரிக் கொண்கன் கங்கை மணாளன்” என்று கலம்பகம் கூறுவது மிகைபடக் கூறல் என்று தோன்றுகிறது. இவ்வரசன் கடற்படையைக் கொண்டிருந்தபடியினாலே, குமரித்துறையையும் கங்கையாற்றையும் உடையவன் என்று கூறியதாகக் கொள்ளலாம். ஆனால், இவன் கங்கையாற்றையும் குமரித்துறையையும் வென்று கொண்டதாகச் சான்று இல்லை.

சிற்றரசர்கள்

நந்திவர்மன் காலத்தில் சோழநாடுபல்லவ அரசுக்குட் பட்டிருந் தது. ஆதிகாலத்தில் சுதந்தரராhக இருந்த சோழ அரசரைக் களபரர் என்பவர் கி. பி. 4-ஆம் நூற்றாண்டிலே வென்று சோழநாட்டை அரசாண்டனர். பின்னர், சிம்ம விஷ்ணு என்னும் பல்லவன் கி. பி. 6-ஆம் நூற்றாண்டில் களபரரை வென்று சோழநாட்டைத் தொண்டை நாட்டுடன் சேர்த்துக் கொண்டான். ஆகவே, சோழ அரசர்கள் முதலில் களபரருக்கும் பின்னர் பல்லவ அரசருக்கும் கீழடங்கி இருந்தார்கள். தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்திலும் சோழர்கள் அவனுக்குக் கீழடங்கியே யிருந்தார்கள். சோழ அரச குடும்பத்தார், உறையூர், பழையாறை, குடந்தை, திருவாரூர் முதலிய ஊர்களில் சிற்றரசர்களாக இருந்தார்கள்.

பல்லவ இராச்சியத்தின் சில பகுதிகளை நந்திவர்மனுக்குக் கீழடங்கிச் சில சிற்றரசர்கள் அரசாண்டார்கள். சிற்றரசரைச் சாமந்த அரசர் என்றும் கூறுவர். நந்திவர்மனுக்குக் கீழடங்கிய சிற்றரசர் எத்தனை பேர் என்பது தெரியவில்லை. ஆனால், குமாராங்குசன், சாத்தன் பழியிலி, விக்கிரமாதித்தியன், நரசிங்க முனையரையர் என்னும் நால்வர் பெயர் தெரிகின்றன.

குமாராங்குசன் என்னும் சிற்றரசன் சோழர்குலத்தைச் சேர்ந்தவன். சோழ நாட்டின் தென் பகுதியை அரசாண்டான். இவனுடைய தலைநகரம் தஞ்சாவூர்.

விக்கிரமாதித்தியன் என்பவன் வாண (பாண) அரசர் பரம் பரையைச் சேர்ந்தவன். “பாண வாணாதிராயனான விக்கிரமாதித்தியன்”