322 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 |
வாதாபிஜித்தாகிய பரதுர்க்கமர்த்தனன், கி. பி. 7-ஆம் நூற்றாண்டில், மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில், வாதாபிப் போரில் கலந்து கொண்டவன். அவனை நந்திவர்மன் காலத்தவனாகக் கூறுவது பொருந்தாது. அதிலும், குறுகோட்டையை வென்றபடியால் வாதாபிஜித் என்று பெயர் பெற்றான் என்பது சிறிதும் பொருந்தாது. இதுபற்றி இந் நூலாசிரியர் எழுதியுள்ள “மாமல்லன் நரசிம்மவர்மன்” என்னும் நூலில் விரிவாகக் காண்க. அடிக்குறிப்புகள் 1.S.I.I. Vol. II. P. 501 - 517. 2.நந்திக் கலம்பகம், 2,16, 35, 84. 3.Ep. col. No. 105 of 1905. 4.தெள்ளாறு, வடஆர்க்காடு மாவட்டம் வந்தவாசி தாலுகாவில் இருக்கிறது. காஞ்சிபுரத்துக்குத் தெற்கே 15 மைலில் உள்ளது. 5.பழையாறு என்பது பழையாறை. இது தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்துக்குத் தெற்கே 5 மைலில் இருக்கிறது. நள்ளாறு என்பது மேற்படி மாவட்டத்தில் காரைக்காலுக்கு அருகில் இருக்கிறது. 6.Ind Ant. Vol. XXXVI. P. 172. 7.E.C. X cd. 76. 8.Ep. Col. No. 52 of 1895. 9.நந்திக் கலம்பகம் 28, 29, 33, 38, 49, 52, 53, 71. 10.நந்திக் கலம்பகம் 19, 23, 61. 11.நந்திக் கலம்பகம் 27, 31. 12.நந்திக் கலம்பகம் 81. 13.S.I.I. Vol. III P. 93. 14.Ep. Col. 188 of 1937 - 38. 15.நரசிங்க முனையரைய நாயனார் புராணம் 1. 16.தடுத்தாட் கொண்ட புராணம் 5. |