பக்கம் எண் :

332மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

வேம்பில் என்பது வேம்பத்தூர். இப்போது இது திருவிசலூர் என்று சொல்லப்படுகிறது.

திருச்சிராப்பள்ளி குகைக்கோயிலில் இவ்வரசனுடைய இன்னொரு சாசனம் காணப்படுகிறது.9 இன்னொரு சாசனம் சோழ தேசத்தில் மண்ணிநாட்டுத் திருவிசலூரில் இருக்கிறது.10 திருச்சி குகைக்கோயில் சாசனங்கள் இப் பாண்டியனைப் பாண்டியாதி
ராசன் வரகுணதேவன் என்று கூறுகின்றன.

வாகுணபாண்டியன் காலத்து எழுத்து.

“ஸ்ரீ வரகுணமஹராஜர்” என்பது இதன் வாசகம்.

இதில் வட்டெழுத்தும் கிரந்த எழுத்தும் சேர்ந்துள்ளன.

வரகுணபாண்டியன், சோழ நாட்டை வென்றான் என்பதைப் பழைய திருவிளையாடற் புராணமும் கூறுகிறது.

“மற்று நேரொவ்வா வரகுணன், பெருவலி வளவன்
துற்று சேனையும் சுந்தரன் அருளினால் தொலைந்து
வெற்றி பூண்டபின் மகிழ்ந்தவன் மேதகு நாடும்
கொற்ற மேன்மையும் கொண்டனன் மண்தலம் மதிக்க.”11

இதில், வரகுணபாண்டியன், பெருவலியுடைய சோழனுடைய சேனையைச் சுந்தரேசுவரர் அருளினால் வென்று சோழ நாட்டை அரசாண்டான் என்று பெரும்பற்றப் புலியூர் நம்பி கூறுகிறார். சோழ அரசர், அக்காலத்தில் குறுநில மன்னராய்ப் பல்லவருக்குக் கீழடங்கி இருந்தனர். ஆகவே சோழர் பெருவலியுடையவர்களாய் இருந்திருக்க முடியாது. பல்லவ சேனையுடன் போர் செய்து, வரகுண பாண்டியன் சோழ நாட்டைக் கைப்பற்றினான் என்பதே சரித்திர உண்மையாகும். சோழநாட்டைப் பிடித்து அரசாண்டபடியால், வரகுணபாண்டியன் சோழனுடன் போர் செய்து வென்றான் என்று திருவிளையாடல் ஆசிரியர் கருதினார் போலும்.12

மணிவாசகர்

வரகுண பாண்டியனின் அமைச்சராக இருந்தவர் வாதவூரராகிய மாணிக்கவாசகர். சிவனடியாராகி மாணிக்க வாசகர் என்னும் பெயர்