பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு331

6. தேர்மாறன் இராஜசிம்மன் – I (அரிகேசரி பராங்குசந் மாரவர்மன் அரிகேசரி5 (பராங்குசந்)
7. ஜடிலன் பராந்தகன்(பராந்தகன்)
ஜடிலன் இராஜசிம்மன் II
வரகுண மகாராசன்
(மாரஞ் சடையன்)
ஸ்ரீ மாரன் ஸ்ரீ வல்லபன்(ஏகவீரன், பரசக்கர
கோலாகலன்)

பாண்டியன் வெற்றி

பாண்டியன் வரகுண மகாராசன், பல்லவ மன்னனான நந்திவர்மன் காலத்திலும் அவன் மகனான தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத் திலும் பாண்டி நாட்டை அரசாண்டான். தந்திவர்மன் காலத்தில் வர குணன், பல்லவ இராச்சியத்தின்மேல் படையெடுத்துச் சென்று, பல்லவர்க்குரியதாக இருந்த சோழநாட்டை வென்றான். முதலில் இடவை என்னும் ஊரைக் கைப்பற்றினான்.6

திண்டுக்கல்லுக்கடுத்த இராமநாதபுரத்தில் மாறஞ்சடையன் காலத்துச் சாசனம், பராந்தகப்பள்ளி வேளானான நக்கம்புள்ளன் என்பவன் ஒரு ஏரியைத் தோண்டினான் என்று கூறுகிறது. இந்த நக்கம் புள்ளன், பாண்டியனுடைய சேனைத் தலைவர்களில் ஒருவன் போலும். பாண்டியன் சோழநாட்டில் சென்று இடவை என்னும் ஊரை வென்றபோது, இந்த நக்கம்புள்ளன் பாண்டியன் சார்பாகப் போர் செய்தான். இந்தப் போர் தந்திவர்மன் காலத்தில் நடைபெற்றது.7

திருச்சிராப்பள்ளி, அம்பாசமுத்திரம் என்னும் ஊர்களில் உள்ள வரகுண பாண்டியனுடைய சாசனங்கள், வேம்பில் என்னும் ஊரைப் பிடித்து அங்கிருந்த கோட்டையை அழித்தான் என்று கூறுகின்றன.8