| பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 411 |
பாண்டியன் கீரஞ்சாத்தன் கீரன் மகன் சாத்தன் என்னும் பெயர் கீரஞ்சாத்தன் என்று அமைந்திருக்கக்கூடும். பாண்டியன் என்னும் அடைமொழியைக் கொண்டு இவன் பாண்டியர் குடியைச் சேர்ந்தவன் அல்லது பாண்டியர் படைத் தலைவன் என்பது தெரியவருகிறது. கள்ளுண்ட மயக்கத்தால் கடமையை மறந்து சில போர்வீரர்கள் அஞ்சியிருந்தபோது, எஞ்சிய படையினருக்குப் பாதுகாவலனாகத் தழுவிக் கொண்டு போரில் குதித்து முன்னேறிச் சென்றான். போர் வீரர்கள் காயம்பட்டு உணவு கொள்ளாமல் இருந்தபொழுது இவன், நீங்கள் உணவு கொள்ளாவிட்டால் நானும் உண்ணமாட்டேன்’ என்று சூளுரைத்து அவர்களை உண்ணும்படி செய்தான். இதனால் இவன் சிறந்த படைத்தலைவனாகவும், படை வீரர்களைத் தன் உயிரைப்போல் போற்றும் உயர்ந்தோனாகவும் விளங்கினான். பாண்டியன் என்னும் பெயர், பாண்டிய அரசர்கள் இவனைப் பாடிய புலவர் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனையும் பாடியுள்ளார். ஆகையால், இவன் நன்மையுடைய படைத்தலைவனாக இருந்தான் என்று கூறலாம்.149 6. பழங்கதைகளால் அறியப்படும் அரசர்கள் தமிழ்நாட்டில் வழங்கும் சில மரபு வழிச் செய்திகள் பாண்டிய மன்னர்களுடைய செயல்களைப்பற்றிக் குறிப்பிடுகின்றன. அவற்றில் சில புராணத் தலைவர்களோடு தொடர்புடையனவாக இருப்பதால் உண்மையான வரலாற்றுச் செய்திகள் என்று கொள்ள முடியவில்லை. வடிம்பலம்ப நின்ற பாண்டியன் நிலப்பகுதியைத் தங்கள் நாட்டுப் பரப்பில் கொண்டிருந்ததோடு நீர்ப்பரப்பாகிய கடலையும் ஓர் எல்லை வரையில் தங்களுக்கு உரியதாகப் பாண்டிய மன்னர்கள் கொண்டிருந்தனர். அந்த எல்லைப் பகுதி எதுவரையில் என்று பாண்டிய அரசன் ஒருவன் தன்னுடைய வேலை வீசிக் காட்டினான்.150 வடிம்பு என்பது வேலின் நுனியாகும். எனவே, இவன் வடிம்பு அலம்ப நின்ற பாண்டியன் எனப்பட்டான். இவன் தன்மீது வேலை வீசியதால் சினங்கொண்ட கடல் பொங்கியெழுந்தது; பாண்டிய நாட்டின் நிலப்பகுதியை விழுங்கியது. இதனால், பாண்டியன் தன் நாட்டுப் பரப்பில் குமரியாறு பாய்ந்த நிலம், குமரிக்கோடு முதலான பல மலைகளைக் கொண்டிருந்த நிலம் |