பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு465

அநுராதபுரம்

இதை அநுரை என்றும் கூறுவர். சிறு கிராமமாக இருந்த இந்த ஊரைச் பாண்டுகாபய அரசன் இலங்கையின் தலைநகரமாக்கினான். பின்னர் இது சிறிது சிறிதாக வளர்ந்து பெரிய நகரமாயிற்று. சிங்கள இராச்சியத்தின் தலைநகரமாக இருந்த இந்த நகரத்தில் சிங்கள அரசரும் தமிழ் அரசரும் தங்கி அரசாண்டார்கள். தேவனாம்பிய திஸ்ஸன் காலத்தில், அசோகச் சக்கரவர்த்தி புத்தகயாவிலிருந்து அனுப்பிய போதி (அரச) மரத்தின் கிளை இந் நகரத்தில் நடப்பட்டது. இப்போதுள்ள அரசமரம் அந்த அரசமரக் கிளைகள் என்று கூறப்படுகிறது. புகழ்பெற்றுப் பெருஞ்சிறப்பாக இருந்த அநுராதபுரம் பிற்காலத்தில் சிறப்புக் குன்றிவிட்டது. கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் புலத்தி நகரம் (பொலனறுவா) இலங்கையின் தலைநகரமானபோது அநுராதபுரம் பெருமை குன்றிக் காலப்போக்கில் சாதாரண நகரமாக மாறி விட்டது. இடைக்காலத்தில் இந்த நகரம் பாழஐடந்து காடுபிடித்து நெடுங்காலம் மறைந்துகிடந்தது. சென்ற நூற்றாண்டில் இந்த நகரம் தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. மறைந்து கிடந்த பல இடங்களும், விகாரைகளும், தாகோபாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில், கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இந்நகரத்தில் தங்கியிருந்து வாணிகஞ்செய்த தமிழ் வணிகரின் மறைந்துபோன மாளிகையும் ஒன்று. அங்கு எழுதப்பட்டுள்ள பிராமி எழுத்தினால் இது தெரிகிறது.

உரோகண நாடு

உரோகண நாடு பழைய இலங்கையின் ஒரு பிரிவு. இலங்கையின் தென்கிழக்கில் இந்த நாடு அமைந்திருந்தது. இதனுடைய கிழக்கிலும் தெற்கிலும் கடல் எல்லையாக இருந்தது. இதனுடைய தலைநகரம் மாகாமம் (மாகாமம் பிற்காலத்தில் திஸ்ஸமாகாமம் என்று கூறப்பட்டது). மாணிக்க கங்கை என்னும் ஆறு உரோகண நாட்டில் வடக்கிலிருந்து தெற்காகப் பாய்ந்து கடலில் கலக்கிறது. சம்பந்திட்டை என்னும் துறைமுகப்பட்டினம் இதன் தெற்கில் இருந்த பேர்பெற்ற துறைமுகப்பட்டினம். இப்போது இஃது ஹம்பந்தோட்டம் என்னும் சிறு துறைமுகமாக இருக்கிறது.