பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 47 |
வெள்வீத் தாழைத் திரையலை நள்ளென் கங்குலுங் கேட்டும்நின் குரலே.” (குறுந். 163) பூழி நாட்டின் கிழக்குப் பக்கத்தில் இருந்த மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்குச் செருப்பு என்பது பெயர். அந்த மலையைச் சார்ந்து காடுகளும் முல்லை நிலங்களும் புல்வயல்களும் இருந்தன. அங்கு ஆடுமாடுகளை வளர்த்துக் கொண்டு ஆயர்கள் வாழ்ந்து வந்தனர். மலைக்காடுகளில் விலையுயர்ந்த கதிர்மணிகளும் கிடைத்தன. “முல்லைக் கண்ணிப் பல்லான் கோவலர் புல்லுடை வியன்புலம் பல்லா பரப்பிக் கல்லுயர் கடத்திடைக் கதிர்மணி பெறூஉம் மிதியல் செருப்பில் பூழியர் கோவே!” (3ஆம் பத்து 1 : 20 - 23) (கோவலர் -ஆயர், இடையர். ஆபரப்பி - பசுக்களை மேயவிட்டு. கல் - மலை. மிதியல் செருப்பு -காலுக்கு அணியாத செருப்பு , அதாவது செருப்பு என்னும் மலை.) “மரம்பயில் சோலை மலியப் பூழியர் உருவத் துருவின் நாள்மேய லாரும் மாரி எண்கின் மலைச் சுரம்.” (நற். 192 :3.5) (துரு -ஆடு மாடுகள். எண்கு - கரடி. சுரம் - காட்டுவழி) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுடைய தம்பியாகிய பல் யானைச் செல்கழு குட்டுவன் (நார்முடிச் சேரலுக்கும் சேரன் செங்குட்டுவனுக்கும் ஆடு கோட்பாட்டுச் சேரலாதனுக்கும் சிற்றப்பன்), பூழியர்கோ (பூழி நாட்டின் அரசன்) என்று கூறப்படுகிறான் (3 ஆம் பத்து 1: 20 - 23). இவன் பூழி நாட்டையாண்டதோடு கொங்கு நாட்டின் சில ஊர்களை வென்றான். பூழி நாட்டை 25 ஆண்டு அரசாண்ட பிறகு இவன் அரசைத் துறந்து காட்டுக்குத் தவஞ் செய்யப் போய்விட்டான் (3 ஆம் பத்துப் பதிகம்). ஆதிகாலம் முதல் சேரருக்கு உரியதாக இருந்த பூழி நாட்டை அதன் வடக்கிலிருந்த துளு நாட்டு நன்னன் கைப்பற்றிக் கொண்டான். அதனால், சேரர் தாங்கள் இழந்த பூழி நாட்டை மீட்டுக் கொள்ள வேண்டியிருந்தது. சேர நாட்டை யரசாண்ட களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் (சேரன் செங்குட்டுவனுடைய தமயன்) நன்னனோடு |