48 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 |
போர் செய்து அவனை வென்று தனக்குக் கீழடக்கிக்கொண்டதோடு அவன் கைப்பற்றி யிருந்த பூழி நாட்டையும் மீட்டுக்கொண்டான். “ஊழின் ஆகிய உயர்பெருஞ் சிறப்பில் பூழிநாட்டைப் படையெடுத்துத் தழீஇ உருள் பூங் கடம்பின் பெருவாயில் நன்னனை நிலைச் செருவின் ஆற்றலை யறுத்து. (4ஆம் பத்து, பதிகம்) “குடா அது இரும்பொன் வாகை பெருந்துறைச் செருவில் பொலம்பூண் நன்னன் பொருதுகளத் தொழிய வலம்படு கொற்றந் தந்த வாய்வாள் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் இழந்த நாடு தந்தன்ன, வளம்.” (அகம். 199: 18-23) பூழி நாட்டுக்குக் கொங்கானம் என்று பெயர் இருந்ததென்று சிலர் கூறுகின்றனர். இவ்வாறு கே.ஜி.சேஷ ஐயர் முதலியோர் கூறுவது தவறு.9 கொங்காண நாட்டரசனாகிய நன்னன் பூழி நாட்டை வென்று சிலகாலம் தன் ஆட்சியின் கீழ் வைத்திருந்தான். ஆனால், பூழி நாட்டுக்குக் கொங்காணம் என்று பெயர் இருந்ததில்லை. களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் பூழிநாட்டை மீட்டுக் கொண்டதையறிந்தோம். ஆனாலும், பூழிநாடு சேர அரசர்களுக்கு இல்லாமல் கொங்குச்சேரருக்கு உரியதாக இருந்து வந்தது. ஏனென்றால், உள்நாடாகிய கொங்கு நாட்டுக்குக் கடற்கரையும் துறைமுகமும் இல்லாத படியால், கொங்கு நாட்டையரசாண்ட கொங்குச் சேரர்களுக்குத் துறை முகப்பட்டினம் வேண்டியதாக இருந்தது. கொங்கு நாட்டை யடுத்து மேற்கிலிருந்த பூழி நாட்டிலே தொண்டி, மாந்தை என்று இரண்டு துறைமுகப்பட்டினங்கள் இருந்த படியால் இத்துறைமுகங்களையுடைய பூழி நாட்டைச் சேர அரசர், கொங்கு நாட்டுச் சேரர்களுக்குக் கொடுத்தனர். சேரர்களின் சேர நாட்டில் பேர்போன முசிறித் துறைமுகம் இருந்தபடியால் அவர்கள் இந்தத்துறைமுகங்களையும் பூழிநாட்டைச் சேர அரசர் கொங்கு நாட்டுச் சேரர்களுக்குக் கொடுத்தனர். சேரர்களின் சேரநாட்டில் பேர்போன முசிறித் துறைமுகம் |