82 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 |
அடிக்குறிப்புகள் 1.`குன்று நிலை தளர்க்கும் உருமிற்சீறி, ஒரு முற்றிருவர் ஓட்டிய ஒள்வாள், செருமிகுதானை வெல்போ ரோயே’, (7ஆம் பத்து. 3: 10-12) ஒரு முற்று - ஒன்றாகச் சேர்ந்து முற்றுகையிட்டு. இருவர் - சோழ பாண்டியர். 2.“இடஞ் சிறிதென்னும் ஊக்கந்துரப்ப, ஒடுங்கா வுள்ளத் தோம்பா ஈகைக், கடந்தடு தானைச் சேரலாதனை, யாங்ஙன மொத்தியோ வீங்குசெலல் மண்டிலம்”. (புறம். 8: 3-6). “நாடுபதி படுத்து நண்ணார் ஓட்டி வெருவருதானை கொடு செருப்பல கடந்து ஏத்தல் சான்ற இடனுடை வேள்வி ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி”(7ஆம் பத்து, பதிகம் அடி. 4-7). 3.`வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை, இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித், தொல்கடன் இறுத்த வெல்போர் அண்ணல்’. 7 ஆம் பத்து 10: 20-22. 4.(P. 124. The Chronology of Early Tamils 1932). 5.(P. 44. Cera Kings of the Sangam period 1937). 6.சேரன் செங்குட்டுவன், பக்கம் 25.சேர அரசர் பரம்பரைகாண்க. மயிலை சீனி. வேங்கசாமி. 7.இவன் `புரோசு மயக்கினான்’ (7ஆம் பத்து பதிகம்) `புரோசு மயக்கி’ என்பது `தன் புரோகிதனிலும் தான் அறநெறியறிந்த தென்றவாறு’ என்று பழைய உரை கூறுகிறது. 8.*(`அறங் கரைந்து வயங்கிய நாவிற் பிறங்கிய, உரைசால் வேள்வி முடித்த கேள்வி, அந்தணர் அருங்கலம் ஏற்ப நீர்பட்டு, இருஞ்சேறாடிய மணல் மலி முற்றம்’ (7ஆம் பத்து 4: 3-6). 9.`புறஞ்சிறை வயிரியர்க் காணின் வல்லே, எஃகு படையறுத்த கொய்சுவல் புரவி. அலங்கும் பாண்டில் இழையணித் தீமென, ஆனாக் கொள்கையை’ (7ஆம் பத்து 4:8-11). 10.“சிறுபுறமென நூறாயிரங்காணங் கொடுத்து நின்றா வென்னுங் குன்றேறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் அக்கோ”. (7ஆம் பத்துப் பதிகத்தின் அடிக்குறிப்பு). |