206 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 3 |
செருப்பல செய்து செங்களம் வேட்டு (பதிகம் 5-11) பொன்னங் கண்ணிப் பொலந்தேர் நன்னன் சுடர்வீ வாகைக் கடிமுதற் றடித்த தார்மிகு மைந்தின் நார்முடிச் சேரல் (4ஆம் பத்து 10:14-16) நார்முடிச் சேரலின் தம்பியாகிய சேரன் செங்குட்டுவன், இப்போரில் துளு நாட்டின் கடற்கரைப் பகுதியில் இருந்த வியலூர், கொடுகூர் என்னும் ஊர்களைக் கைப்பற்றிய செய்தியைக் கீழ்க்கண்ட செய்யுள்களினால் அறிகிறோம்: உறுபுலி யன்ன வயவர் வீழச் சிறுகுரல் நெய்தல் வியலூர் நூறி அக்கரை நண்ணிக் கொடுகூர் எறிந்து (5ஆம் பத்து:10-12) கறிவளர் சிலம்பில் துஞ்சும் யானையின் சிறுகுரல் நெய்தல் வியலூர் எறிந்தபின் (சிலம்பு, நடுகல்.114-115) இப்போரின் போது செங்குட்டுவன், துளு நாட்டின் துறை முகப்பட்டின மான நறவு என்னும் பட்டினத்தையும் பிடித்தான். இவ்வாறு களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் தன் தம்பியருடன் சேர்ந்து துளு நாட்டை வென்று அடக்கினான். இவ் வெற்றியைக் கல்லாடனார் மிகத் தெளிவாகக் கூறுகிறார். குடாஅது இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில் பொலம்பூண் நன்னன் பொருதுகளத் தொழிய வலம்படு கொற்றந் தந்த வாய்வாள் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் இழந்த நாடுதந் தன்ன வளம் (அகம்199:18-23) பிறகு, துளு நாடு சேரரின் ஆட்சிக்குட்பட்டது. நன்னன் மூன்றாவன் (ஏறத்தாழ கி. பி. 150-180) இரண்டாம் நன்னனுடைய மகனான மூன்றாம் நன்னன் சேரருக்கு அடங்கித் துளுநாட்டையரசாண்டான். அவன், தான் சேரனுக்கு |