பண்டைத் தமிழக வரலாறு - துளு நாடு | 207 |
அடங்கியவன் என்பதற்கு அடையாளமாக நன்னன் உதியன் என்று பெயர் பெற்றிருந்தான். நன்னன் என்பது துளு நாட்டு அரசரின் குடிப் பெயர். உதியன் என்பது சேரநாட்டு அரசரின் குடிப்பெயர். எனவே, நன்னன் உதியன் என்பதற்குச் சேரர் ஆட்சிக்கு உட்பட்ட நன்னன் என்பது பொருள். ‘ நன்னன் உதியன் அருங்கடிப்பாழி’ (அகம் 258:1) சேரர் துளு நாட்டைத் தமது ஆட்சியின்கீழ்க் கொண்டுவந்த பிறகு புன்னாடும் அதன் தலைநகரமான கட்டூரும் சேரர் ஆட்சிக்குட்பட்டன. நன்னன் மூன்றாவன் சேர அரசர்களுக்கு அடங்கித் துளு நாட்டை யரசாண்டான். பெரும்பூட்சென்னி என்னும் சோழன் வட கொங்கு நாட்டிலிருந்த புன்னாட்டின் தலைநகரமான கட்டூரின் மேல் படையெடுத்துச் சென்றபோது, சேர அரசன் சார்பாக அக்கட்டூர்ப் போரில் சோழனை எதிர்த்த சிற்றரசர்களில் இந்த நன்னன் உதியனும் ஒருவன் என்று தெரிகிறான். கட்டூரின் மேல்படையெடுத்துவந்த பெரும் பூட் சென்னியின் சேனைத்தலைவனாகிய பழையன் என்பவனை எதிர்த்தவர்கள் இந்த நன்னனும் ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை என்பவர்களும் ஆவர். நன்னன், ஏற்றை, நறும்பூண் அத்தி துன்னருங் கடுந்திறல் கங்கன், கட்டி பொன்னணி வல்விற் புன்றுறை என்றாங்கு அன்றவர் குழீஇய அளப்பருங் கட்டூர்ப் பருந்துபடப் பண்ணிப் பழையன் பட்டென (அகம் 44:7-11) நன்னன் மூன்றாவனுக்குப் பிறகு துளு நாட்டை யரசாண்டவர் யார் என்பது தெரியவில்லை. மூன்றாம் நன்னனுடைய பரம்பரை யினரே தொடர்ந்து ஆண்டிருக்கக்கூடும். துளு நாட்டை வென்ற பிறகு நார்முடிச் சேரல் செங்குட்டுவன் இவர்களின் தம்பியாகிய ஆடுகோட் பாட்டுச் சேரலாதன், துளு நாட்டுத் துறைமுகப்பட்டினமாகிய நறவு (நாறாவி) என்னும் பட்டினத்தில் தங்கியிருந்தான் என்று கூறப் படுகிறான். அறாஅ விளையுள் அறாஅ யாணர்த் தொடைமடி களைந்த சிலையுடை மறவர் பொங்குபிசிர்ப் புணரி மங்குலொடு மயங்கி வருங்கடல் ஊதையிற் பனிக்கும் துவ்வா நறவின் சாயினத் தானே (6ஆம் பத்து 10:8-12) |