பக்கம் எண் :

162மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4

உடையான் வைதம்ப சூலத்து சூவப்பராசா மகன் போரிகடேசரே என்பவன் சாதே அரசனுக்கு உதவியாகத்தொறு மீட்டுக் கொடுத்ததையும், மீட்ட பிறகு அப்போரில் இறந்ததையும் கூறுகிறது இந்த நடுகல் சாசனம்.1

வட ஆர்க்காடு மாவட்டம் செங்கம் தாலுகா வேலூரில் உள்ள நடுகல் சாசனம். இந்தச் சாசனக் கல்லில், வில்லும் அம்புங்கொண்டு போர் செய்கிற ஒரு வீரனுடைய புடைப்புச் சிற்பமும் இருக்கிறது. விசய நரசிம்மவர்மனுடைய இரண்டாவது ஆண்டில் எழுதப்பட்டது இச்சாசனம். வாணசேகரன் அதியரசர் சேவகனாகிய மீக்கொன்றை நாட்டு மேல்வேளூர் அதிபர் பரயம் ஆளியார் என்பவர், தமது ஊர்த்தொறுவைப் பகைவர் கொண்டுபோனபோது, போர் செய்து தொறுவை மீட்டார். ஆனால், அப்போரில் உயிர் துறந்தார். அவருடைய வீரத்தைப் பாராட்டி நடப்பட்டது இந்த நடுகல்.2

வட ஆர்க்காடு மாவட்டம் செங்கம் தாலுகா வேலூரில் உள்ள நடுகல் சாசனம். சுந்தர சோழன் II உடைய 16ஆம் ஆண்டில் எழுதப் பட்டது. மீகொன்றை நாட்டைச் சேர்ந்த வேலூரை வாணகோவரையர் என்னும் சிற்றரசர் ஆண்டபோது, அவ்வூர்த் தொறுவைப் பகைவர் கொண்டுபோக, வாணகோவரையரின் சேவகராகிய (போர்வீரனாகிய) பொங்கள தொண்டைமான் மகன் வேம்படி என்பவர் பகைவருடன் போர் செய்து தொறுமீட்டார். ஆனால், போரில் உயிர்விட்டார் என்று இக்கல்வெட்டுச் செய்தி கூறுகிறது.3

வட ஆர்க்காடு மாவட்டம் செந்தாட்டூரில் உள்ள நடுகல் சக ஆண்டு 832 (கி.பி. 910) செந்தாட்டூரில் பகைவர் வந்து தொறுக்கவர்ந்து சென்றபோது, இகல் மறைமங்கலத்து மாவலிவாணராயரான குடி பரிதாண்டிக்காமனார் அத்தொறுவை மீட்டுப் போரில் இறந்தார் என்பதை இந்நடுகற் சாசனம் கூறுகிறது.

வட ஆர்க்காடு மாவட்டம் வேலூர் தாலுகா ஆம்பூர் காங்கரெட்டித் தெருவில் உள்ள இரண்டு வீரகற்கள். (ஆம்பூரின் பழைய பெயர் ஆமையூர் என்று இச்சாசனங்களிலிருந்து தெரிகின்றது.) கோவிசைய நிருபதுங்கவர்மர் என்னும் அரசன் காலத்தில் நிகழ்ந்த கரந்தைப் போரைக் கூறுகின்றன இவ்வீரக் கற்சாசனங்கள். இச்சாசனங்களின் வாசகம் இவை:

“ஸ்ரீ கோவிசைய நிருபதொங்க விக்கிரம பருமர்க்கு யாண்டு இருபதாவது. படுவூர் கோட்டத்து மேல் அடையாறு நாட்டு