| பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு | 163 |
ஆமையூர்மேல் நுளம்பன் படைவந்து தொறுகொள்ள பிருதிகங்கரையர் சேவகர் பெருணகரக் கொண்டக் காவிதி அகளங்கத்துவராயர் மகன் சண்ணன் தளரா வீழ்ந்துபட்டான்.” (காவிதி என்பது சேனைத் தலைவருக்கு அரசரால் அளிக்கப்படும் பட்டம்.) “கோவிசைய நிருபதொங்க விக்கிரமபருமர்க்கு யாண்டு இருபத்தாறாவது, படுவூர்க் கோட்டத்துமேல் அடையாறு நாட்டு ஆமையூர்மேல் நுளம்பன் படைவந்து தொறுகொள்ள பிருதிகங் கரையர் சேவகர் அகளங்கத்துவரையர் மருகன் மசிழு.... னி வேடன் கலியராமன் பட்டான்4”. மேற்படி மாவட்டம் முக்குத்தூரில் உள்ள மற்றொரு நடுகல் சாசனம்: “கோவிசெய நரசிங்க பருமற்கு யாண்டு மூன்றாவது. வின்று நாட்டு வடகரை ஆளுந்தகடூர் நாடர் வலிமதுர சேவகர் பாக்கத்துக்குடி அதிகமத்தார் முருகன் முக்குட்டூர்த்தொறு சன்மதுரரு கொள்ளத்தொறு மீட்டுப்பட்டார்5”. வட ஆர்க்காடு மாவட்டம் குடியாத்தம் தாலுகா குளிதிக்கி கிராமத்தில் ஆற்றுக்கு அருகில் உள்ள சாசனம். இது விஜயநந்திவர்மன் என்னும் பல்லவ அரசனின் 52 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. “ஸ்ரீ கோவிசெய நந்திச்சுர பருமற்கு யாண்டு ஐம்பத்திரண்டாவது. பெருமானடிகள்மேல் பல்லவரையன் படை வந்து பெண்குழிக் கோட்டை அழித்த ஞான்று வாணவரையர் மாமாடி திரிக எனத்திரிந்து பட்டார் கற்காட்டூர் உடைய கங்கதியரையர் கன்னாடு பெருங்கங்கர்6.” தென் ஆர்க்காடு மாவட்டம் திண்டிவனம் தாலுகா ஒலக்கூர் சாவடிக்கு அருகில் நடப்பட்டுள்ள நடுகல். இக்கல்லில், வீரன் ஒருவன் கையில் வாளை ஏந்திச் செல்வதுபோல புடைப்புச் சிற்பம் அமைக்கப் பட்டுள்ளது. முற்காலத்தில் இவ்வூரில் யானைகளைக்கொண்டு கொந்தளிப்பு உண்டாக்கி ஊரை அழித்தபோது, இவ்வூர் மாதிரன் என்பவன் எதிர்த்துப் போராடி இறந்ததை இக்கல்லெழுத்து கூறுகிறது. இதன் வாசகம்: “கம்பப்பெருமான் ஆனையாடின கொந்தளத்து இவ்வூரழிந்த நாட்பட்டான் இவ்வூர் தொதுபத்தி மாதிரன், ஸ்வஸ்தி ஸ்ரீ7”. |