பக்கம் எண் :

220மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4

முசிறித் துறைமுகத்தில் நடந்த மிளகு வாணிகத்தைப் புலவர் பரணரும் கூறுகிறார். உள்நாடுகளில் விளைந்த மிளகைப் பறித்துச் சேர்த்து மூட்டைகளாகக் கட்டி முசிறித் துறைமுகத்துக்கு அனுப்பி
னார்கள். யவனக் கப்பல்கள் வந்தபோது மிளகு மூட்டைகளைப் படகுகளில் ஏற்றிக்கொண்டு போய்ப் பெரிய யவன நாவாய்களில் ஏற்றினார்கள். ஏற்றின மிளகுக்கு ஈடாக யவனர் தந்த பொற்காசு
களை வாங்கிக் கொண்டு வந்தார்கள் என்று பரணர் கூறுகிறார்.

மனைக் குவைஇய கறிமூடையால்
கலிச்சும்மைய கரை கலக்குறுத்து
கலந் தந்த பொற்பரிசம்
கழித் தோணியாற் கரைசேர்க்குந்து48

(மனைக்குவை இய - வீடுகளில் குவித்துவைத்த, கறிமூடை -மிளகு மூட்டை, கலம்தந்த - யவனரின் மரக்கலம் கொண்டுவந்த, பொற் பரிசும் - பொன்விலை) இச்செய்யுளில் ‘கழித்தோணி’ கூறப்படுகிறது. கழிகள் (உப்பங்கழிகள்) முசிறித் துறைமுகப்பட்டினத்தில் இருந்தன என்பது இதனால் தெரிகிறது. உப்பங்கழிகள் இக்காலத்தில் ‘காயல்’ என்று கூறப்படுகின்றன.

முசிறித் துறைமுகம், முசிறிப் பட்டினத்தில் சுள்ளியாறு கடலில் கலக்கிற இடத்தில் ஆற்றின் வடக்குக் கரையில் இருந்தது. அந்தத் துறை முகத்தில் அரபுநாடு முதலான நாடுகளிலிருந்து வந்த படகுகள் வந்து தங்கின. ஆனால், யவனரின் பெரிய கப்பல்கள் துறைமுகத்தில் வந்து நிற்கவில்லை. ஏனென்றால், பெரியாறு அடித்துக் கொண்டுவந்த மணல் நெடுங்காலமாக துறைமுகத்தில் தூர்ந்து கொண்டு, அந்த இடத்தை ஆழம் இல்லாமல் செய்துவிட்டது. யவனக் கப்பல்கள் பெரிதாகவும் உயரமாகவும் இருந்தபடியால் அவை துறைமுகத்தில் வந்து நிற்காமல், தூரத்தில் கடலிலேயே நின்றன. ஆகையால் சரக்குகளைத் தோணி களில் ஏற்றிக் கொண்டுபோய் யவனக் கப்பல்களில் இறக்கினார்கள். இந்தச் செய்தியை யவனர்கள் எழுதிய குறிப்பிலிருந்து அறிகிறோம்.

துறைமுகத்தைச் சார்ந்து முசிறிப்பட்டினம் பெரிதாக இருந்தது. வடக்குத் தெற்காகவும் கிழக்கு மேற்காகவும் வீதிகள் அமைந்திருந்தன. அங்குக் கரையோரங்களில் நெய்தல் நிலமக்களின் குப்பங்கள் இருந்தன. அவர்கள் கடலில் சென்று மீன்பிடித்து, விற்று வாழ்ந்தனர். அயல்நாடுகளிலிருந்து வாணிகத்துக்காக வந்த அராபியர், யவனர்